குன்னூர் :குன்னூர் அட்டடி பகுதியில் மீண்டும்வந்த சிறுத்தை பாறையில் ஓய்வடுத்துசெல்கிறது.

நீலகிரி மாவட்டம், குன்னூர் நகராட்சி அட்டடி அருகில் அடர்ந்த வனப்பகுதி உள்ளதால் சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்டவை அவ்வப்போது நகருக்குள்வந்து செல்கின்றன கடந்த ஆண்டு மே மாதம் காட்டாடு ஒன்றை துரத்தி வந்து கடித்த சிறுத்தை மக்களின் சப்தம் கேட்டு விட்டுச்சென்றது.
இந்நிலையில், இன்று மாலை 5:30மணியில் இருந்து 6:20 மணி வரை இங்குவந்த சிறுத்தை பாறை மீது அமர்ந்து ஓய்வெடுத்தது.

இது தொடர்பாக, குன்னூரை சேர்ந்தடைட்டஸ் ஜான் கூறுகையில், "ஊரடங்குபிறப்பித்ததில் இருந்து இதுவரை, 3 முறை,இதே பாறையில் சிறுத்தை ஒய்வெடுத்துசென்றது. கடந்த முறை மட்டும் வேறுசிறுத்தை வந்தது. வனவிலங்கு எடுப்பதில்ஆர்வம் கொண்டதால் தொடர்ந்து இங்குதினமும் வந்து காத்திருந்து படம் எடுத்துவருகிறேன்." என்றார்.இதனால் மீண்டும் இப்பகுதி மக்கள்அச்சமடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE