லண்டன்: சீன வங்கிகளில் ரிலையன்ஸ் நிறுவனம் பெற்ற கடன்களை 21 நாளில் திருப்பி செலுத்த வேண்டும் என அனில் அம்பானிக்கு இங்கிலாந்து கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவத்தின் தலைவரான அனில் அம்பானி கடந்த 2012 ம் ஆண்டில் சீனாவில் 3 வங்கிகளிடம் இருந்து சுமார் 176 மில்லியன் டாலர் அளவிற்கு கடன் வாங்கி இருந்தார். இதனிடையே சீன வங்கி்யிடம் பெற்ற கடனை திருப்பி செலுத்தாமல் ரிலையன்ஸ் நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சீன வங்கிகள் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இது குறித்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கி உள்ளது.அதில் அனில் அம்பானி சீன வங்கிகளிடம் பெற்ற 716 மில்லியன் கடனை (இந்திய மதிப்பில் ரூ.5,446 கோடி) 21 நாட்களில் திரும்ப செலுத்த வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.

இதனிடையே அனில் அம்பானியின் செய்தி தொடர்பாளர் , இது அனில் அம்பானியின் தனிப்பட்ட கடன் இல்லை. கடன் தொகைக்கு அனில் அம்பானி கையெழுத்திடவில்லை எனவும், இது தொடர்பாக சட்ட ரீதியான ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும். இது ரிலையன்ஸ் குழுமத்தின் மற்ற நடவிக்ககைளை பாதிக்காது எனவும் அவர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE