ரியாத் : சவுதி அரேபியாவில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு மேலும் 2,442 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடகளிலும் பரவி அச்சுறுத்தலை உண்டாக்கியுள்ளது. சவுதி அரேபியாவிலும் நோயின் பாதிப்பு சற்று தீவிரமடைந்து 70,000 ஐ தாண்டியது. சவுதியில் ஒரே நாளில் புதிதாக 2,442 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 70,161 ஆக அதிகரித்துள்ளது. சவுதியில் நோயின் பாதிப்பு ஒரு புறம் அதிகரித்து வந்தாலும், மற்றொரு புறம் நோயின் தாக்கத்தில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. அதன்படி, 2,233 பேர் கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இதுவரை நோய் தொற்றிலிருந்து மீட்கப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 41,236 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை 379 பேர் பலியாகினர். சவுதியில் நோய் பாதிப்பு அதிகமாக பதிவு செய்யும் நகரங்களில் ரியாத் (794 பேர்) முன்னிலையில் உள்ளது. தொடர்ந்து, மெக்கா (466 பேர்) , ஜெட்டா (444 பேர்) , மெதீனா (271 பேர்) பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தம்மம் பகுதியில் புதிதாக 79 பேரும், அல் ஜூபைலில் 77 பேரும் பாதிக்கப் பட்டனர்.

மேலும் புதிதாக நோய் பாதிக்கப்பட்டவர்களில் 79 சதவீதம் பெண்கள் மற்றும் 21 சதவீதம் ஆண்கள் எனவும், அதில் 10 சதவீதம் குழந்தைகள், 86 சதவீதம் பெரியவர்கள், 4 சதவீதம் வயதானவர்களில் உள்ளனர்; நாட்டில் நோய் பாதிக்கப்பட்டவர்களில் 35 சதவீதத்தினர் சவுதியை சேர்ந்தவர்கள் மற்ற 65 சதவீதத்தினர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE