சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் திங்கள் கிழமை ரமலான் ; தலைமை காஜி

Updated : மே 23, 2020 | Added : மே 23, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
தமிழகம், திங்கள் கிழமை, மே.25, ரமலான், தலைமை காஜி, Eid-ul-Fitr, muslims, religion, Tamil Nadu, TN, Ramadan

சென்னை : 'ரம்ஜான் பண்டிகை திங்கள் கிழமை கொண்டாடப்படும்' என, தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.

இஸ்லாமியர்கள் புனிதமாக கடைபிடிக்கும், ரமலான் நோன்பு காலம், இந்த ஆண்டு முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாஹுத்தீன் முகமது அயூப் வெளியிட்ட செய்திக்குறிப்பு:ரமலான் மாதத்துக்கு அடுத்த, ஷவ்வால் மாத பிறை தமிழகத்தில் காணப்படவில்லை. எனவே, நாளை (மே. 24) முஸ்லிம்கள் நோன்பு கடைபிடிப்பர்.
தமிழகம் முழுவதும், வரும் மே. 25-ம் தேதி (திங்கள் கிழமை) ரம்ஜான் பண்டிகையான, பெருநாள் கொண்டாடப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news




Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மண்ணாந்தை - Raichur,இந்தியா
24-மே-202000:07:30 IST Report Abuse
மண்ணாந்தை அமாவாசை என்பது "0" நாள் அல்லது தேய்பிறையில் 15 ஆம் நாள். பிரதமை முதல் நாள். துவிதியை இரண்டாம் நாள். திரிதியை மூன்றாம் நாள்... அப்படியாக கணக்கு. ஆயினும், மூன்றாம் பிறை என்பது கணக்களவில் மூன்று என்று சொல்லப் பட்டாலும், அது அமாவாசைக்குப் பிறகு முதலில் தோன்றும் நிலவு. அது பெரும்பாலும் துவிதியையில் தெரிந்துவிடும். அதனால் தான் காலண்டர்களில் துவிதியை அன்றே "சந்திர தரிசனம்" என்று போட்டிருப்பார்கள். ஆயினும் இன்று நிலவு தெரிய வாய்ப்பு இருந்திருப்பதற்கில்லை. ஏனெனில், இன்று, அதாவது, 23 ம் தேதி மாலை போய் நள்ளிரவு 12 மணி முடிந்து நாற்பத்திரண்டு நிமிடங்களுக்கு தான் பிரதமையே முடிகிறது. பொதுவாக துவிதியை திதியே பாதி கடந்த பின் யாருக்கு மாலைப் பொழுது வருகிறதோ அவர்களுக்குத்தான் மூன்றாம் பிறை துவிதியையில் தெரியும். அந்த வகையில் நாளை மாலை ஆறு மணிக்கு நமக்கு துவிதியை முக்கால் பங்கு கடந்து விடுவதால், நமக்கு நாளை மாலை மூன்றாம் பிறை தெரியும். பொதுவாக ஒரு நம்பிக்கை உண்டு. மூன்று மூன்றாம் பிறைகளை தொடர்ந்து பார்த்தால், முகத்தில் சிவகளை வரும் என்றும், ஏழு பிறைகளை தொடர்ந்து பார்த்தால் ராஜயோக வாழ்க்கை என்றும் சொல்வார்கள். முயன்றால் மூன்று பார்த்து விடலாம். ஆனால் ஏழு என்பது இயலாத காரியமே. பெரும்பாலும், நாளை (24 ம் தேதி)மாலை போல, துவிதியை முக்கால் பங்கு முடிந்த நிலையில் துவிதியை வருவது அரிது. இதற்கிடையில் மழை மேகம் என்றெல்லாம் வந்து ஏழு பிறைகளை யாரும் தொடர்ந்து பார்த்திட வாய்ப்பே வராது. ஒருவேளை ராஜாவாக இருந்தால், எந்த எந்த மாதத்தில், எந்த எந்த நாட்டின் மேற்கு கடற்கரையில், மாலை ஆறு மணிக்கு துவிதியை முக்கால் திதி கடந்த நிலையில் வருகிறது என்று ஆராய்ந்து, விசா எடுத்து, அந்த அந்த நாடுகளுக்குச் சென்று பார்த்து விட்டு வரலாம். இது போன்ற விஷயங்கள் பொதுவாக எல்லா மதங்களுக்கும் ஒன்றுதான். புனிதம் அனைவருக்கும் புனிதம் தான். இவற்றை அமர்ந்து யோசித்துப் பார்த்தாலே புனிதம் தான்.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
23-மே-202021:03:42 IST Report Abuse
Lion Drsekar ஜாதி மத வேறுபாடு இல்லாமல் நாம் அனைவரும் ஒரு குடும்பமாக வாழ்கிறோம், இஸ்லாமிய வீட்டு விழாக்களுக்கு சென்றால் சைவ சாப்பாட்டுக்காரர்களுக்கு தனியாக சமையல் செய்து அதை அந்த குடும்ப பெரியவர்கள் தனியாக உபசரிப்பது வழக்கம், அதே போன்று அசைவ பிரியர்களுக்கு வயிறார உணவு வழங்குவது வழக்கம், இதே உறவு நீடிக்கவேண்டும் என்பதே நம் எல்லோரின் விருப்பமும் . அப்படியிருக்க புனித ரமலான் நோன்பு அன்று உங்கள் வீட்டார்களைவிட மாற்று மதத்தினர்களுக்கு மிக அதிக அளவில் உணவு வழங்கும் உறவு நீடிக்கவேண்டும், இது ஒரு சாப்பாட்டுக்காக உறவு அல்ல, உள்ளதினால் வரும் உறவு. இனிய புனித ரமலான் வாழ்த்துக்கள் வந்தே மாதரம்
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
24-மே-202003:32:18 IST Report Abuse
 ஜெய்ஹிந்த்புரம்உண்மை தான். அதே நேரம் இந்து பண்டிகைகளின் போது அவர்களை வீட்டுக்குள் அண்டவிடாமல் இருப்பதையும், தவறி கூப்பிட்டால் தீட்டு கழிக்காத குறையாக வருந்துவதையும் பார்த்திருக்கிறேன். உங்க இந்த கருத்துக்கு எத்தனை பேர் கழுவி ஊற்றி தம்ஸ் டவுன் போடுறான்னு பாருங்க....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X