பொது செய்தி

இந்தியா

சாத்தியமான உதவிகளை அளிப்போம்: இலங்கைக்கு இந்தியா உறுதி

Updated : மே 23, 2020 | Added : மே 23, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
Pm, Modi, Prime Minister, Narendra Modi, PM Modi, coronavirus, corona, covid-19, corona outbreak, corona updates, corona crisis, corona cases, covid-19 battle, covid-19 pandemic, Gotabaya, Gotabaya Rajapaksa, India, Sri Lanka, இந்தியா, இலங்கை, பிரதமர், மோடி, அதிபர்

புதுடில்லி: கொரோனா பாதிப்புகளை சமாளிக்க, சாத்தியமான அனைத்து உதவிகளையும் இந்தியா அளிக்கும் என பிரதமர் மோடி இலங்கை அதிபரிடம் உறுதி அளித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது கொரோனா பரவல் குறித்தும், அதனால் ஏற்படும் சுகாதாரம் மற்றும் பொருளாதார தாக்கும் குறித்தும் இருநாட்டு தலைவர்களும் உரையாடினர். அப்போது, கொரோனா பாதிப்புகளை சமாளிக்க, சாத்தியமான அனைத்து உதவிகளையும், இந்தியா இலங்கைக்கு அளிக்கும் என ராஜபக்சேயிடம் மோடி உறுதி அளித்தார்.

இந்தியாவின் உதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் இருவரும் பேசினர். இலங்கை மக்களின் ஆரோக்கியம், நலன்களுக்கு பிரதமர் மோடி தனது வாழத்துக்களை தெரிவித்தார்.


latest tamil news
மோடி டுவிட்:

இதுகுறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டதாவது: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுடன் சிறப்பான உரையாடல் நடந்தது. அவரது தலைமையில், இலங்கை கொரோனாவை எதிர்த்து திறம்பட போராடுகிறது. இந்தியா தனது அண்டை நாடுகளுக்கு கொரோனாவை எதிர்த்து போராடவும், பொருளாதார தாக்கத்தை கையாளவும் தொடர்ந்து ஆதரவு அளிக்கும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
24-மே-202004:28:42 IST Report Abuse
J.V. Iyer அண்டை நாடுகள் சுமுகமாக இருந்தால் தான் நம் நாடு வளர்ச்சி அடையும். பாக்கிஸ்தான் அரசின் செயல்களால், இந்தியர்களின் ஒற்றுமை வலுக்கும்.
Rate this:
Cancel
aryajaffna - Zurich,சுவிட்சர்லாந்து
24-மே-202003:03:02 IST Report Abuse
aryajaffna அதாவது இன்றைய நிலவரப்படி இலங்கையில் கொரோன தோற்று 1089 , இந்தியாவில் 131,423 , இலங்கையில் கொரோன தோற்று குறைவாக இருப்பதட்கு காரணம் உன்னையான நட்பு நாடு சீன கொடுத்த உதவிகள் , ஆலோசனைகள், மற்றும் உறுதியான தீர்மானம் எடுக்கும் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே இப்ப இவர்கள் என்ன உதவி செய்ய போகின்றார்கள், கொரோன நோயாளிகளை கடல் வழியாக இங்கு அனுப்பாமல் இருந்தால் அது ஒன்றே போதும்.
Rate this:
Cancel
Abbavi Tamilan - Riyadh,சவுதி அரேபியா
24-மே-202000:56:55 IST Report Abuse
Abbavi Tamilan முதலில் எல்லா மாநில முதல்வர்களும் கேட்டு கொண்டது போல் நிவாரணங்களை அளித்துவிட்டு பிறகு அடுத்த நாடுகளைபற்றி பேசலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X