தெலுங்கானா ; 41 சிறப்பு ரயில்களால் பயனடைந்த 70,000 வெளி மாநில தொழிலாளர்கள்

Updated : மே 23, 2020 | Added : மே 23, 2020
Share
Advertisement

ஐதராபாத் : கொரோனா ஊரடங்கால் சிக்கி தவிக்கும் வெளி மாநில தொழிலாளர்கள் தெலுங்கானாவில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல 41 சிறப்பு ஷ்ராமிக் ரயில்கள் இயக்கப்பட்டடது. அதன் மூலம் 70,000 தொழிலாளர்கள் வரை பயனடைந்ததாகதெரிவிக்கப்பட்டுள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும் நோய் பரவலை கட்டுப்படுத்தவும், நோய் பாதிப்புகளில் இருந்து தவிக்கும் மக்களை பாதுகாக்கவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி ஊரடங்கால் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள்கிடைக்காமல் தவிக்கும் வெளி மாநில (புலம் பெயர்ந்த) தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர். அவர்களை முறையாக ஊர்களுக்கு அனுப்ப மாநில அரசுகள் ரயில்களை இயக்கி நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி, தெலுங்கானாவில் இருக்கும் வெளி மாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப மத்திய ரயில்வேயுடன் இணைந்து 41 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் மூலம் மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக முதல்வர் சந்திரசேகர ராவ் முன்பு அறிவித்திருந்தார். அதன்படி, நாம்பள்ளி, கட்கேசர், லிங்கம்பள்ளி, செகந்திராபாத், கச்சேகுடா மற்றும் காசிப்பேட்டை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஜார்க்கண்ட், ஒடிசா, பீகார் மற்றும் உத்தரபிரதேசத்திற்கு தொழிலாளர்கள் ரயில்கள் மூலம் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் 70,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வரை பயனடைந்துள்ளனர்.


latest tamil news



சிறப்பு ரயில்களில் தொழிலாளர்கள் பயணிக்கும் முன் அவர்களது உடல் வெப்பநிலை கண்டறிவது, மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது , கைகளை சுத்தமாக கழுவுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. அத்துடன் பயணங்களில் அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீரும் வழங்கப்பட்டது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X