பொது செய்தி

தமிழ்நாடு

பல்வேறு துறைகளிலும் தொழிலாளர் பற்றாக்குறையால் சிக்கல்!

Updated : மே 25, 2020 | Added : மே 23, 2020 | கருத்துகள் (24)
Share
Advertisement
பல்வேறு துறைகள், தொழிலாளர் பற்றாக்குறை, சிக்கல்!

நாடு முழுதும் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி சென்று கொண்டிருக்கும் வேளையில், ஊரடங்கு முடிவிற்குப் பின், பல்வேறு துறைகளிலும், தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டு, உற்பத்தி பாதிக்கப்படும் நிலை உருவாகும் என, அஞ்சப்படுகிறது.

சொந்த ஊர் சென்றுள்ளவர்கள் எப்போது திரும்புவார்கள், அவர்களை திரும்ப அழைக்க, அரசிடம் என்ன திட்டம் உள்ளது என்பது போன்ற பல கேள்விகளும், எதிர்பார்ப்புகளும், எழ துவங்கி உள்ளன.கடந்த, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 13 கோடியே 90 லட்சம் தொழிலாளர்கள், மாநிலம் விட்டு மாநிலம் குடிபெயர்ந்துள்ளனர் என, தகவல் வெளியிடப்பட்டது.இவர்கள், தெருவோர கடைகள், கட்டுமானப் பணிகள், ஜவுளி ஏற்றுமதி, விவசாயம், மால்கள், சுமை துாக்கும் தொழில், சமையல், ஓட்டல் சிப்பந்திகள், அழகு நிலையங்கள் என, பல துறைகளிலும் உள்ளனர்.


நடைபயணம்


தற்போது, 'கொரோனா' பரவல் காரணமாக, வேலை இழந்து, முதலாளிகளால் கைவிடப்பட்டு, அடுத்த வேளை உணவுக்கே வழி இல்லாத நிலையில், மூட்டை முடிச்சுகளுடன், குடும்பம் குடும்பமாக, சொந்த ஊர்களை நோக்கி, ரயில்களிலும், பஸ்களிலும், நடைபயணமாகவும், தொழிலாளர்கள் ஊர்களுக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் ஊர் போய் சேர்ந்த பின், கொரோனா களேபரங்கள் முடிவுக்கு வந்து, இயல்பு வாழ்க்கை திரும்பிய பிறகு, இவர்கள் பணியாற்றிய இடங்களை யார் நிரப்ப போகிறார்கள்.அவர்களின் பணிகளை செய்வதற்கு, எங்கிருந்து ஆட்கள் கிடைக்கப் போகின்றனர்; உள்ளிட்ட பல கேள்விகள் எழத் துவங்கி உள்ளன. 'நம் பொருளாதாரத்தை மீண்டும் துவங்கும் போது, தொழிலாளர் பற்றாக்குறையை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்பது குறித்து, அரசு சிந்தித்து வருகிறது' என, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, சமீபத்தில் கருத்து தெரிவித்து இருந்தார்.'இந்த விவகாரத்தில், ஊரடங்குக்கு முந்தைய நிலையை எட்ட, குறைந்தது ஒன்றில் இருந்து, இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம்' என, நிபுணர்கள் கூறுகின்றனர். இனி, தொழிலாளர்கள், வேலை வாய்ப்புக்காக, தங்கள் ஊர்களை விட்டு, பல 100 கிலோ மீட்டர்கள் தொலைவுக்கு செல்லாமல், அருகில் உள்ள நகரங்களில், வேலை வாய்ப்புகளை தேடிக் கொள்ளக்கூடும்.இந்த விவகாரத்தில், கேரள அரசு, சமயோசிதமாக செயல்பட்டதாக, தொழில்துறை வல்லுனர்கள் கருதுகின்றனர்.

கேரளாவில், நான்கு லட்சம் குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு, தங்கும் வசதி, அவர்கள் மாநில உணவுகள், 'மொபைல் போன் ரீசார்ஜ்' உள்ளிட்ட வசதிகளை, கேரள அரசு செய்து கொடுத்து, அவர்களை தங்கள் மாநிலத்திலேயே, பாதுகாப்புடன் வைத்திருப்பதாக, அவர்கள் தெரிவித்தனர்.

குடிபெயர்ந்த தொழிலாளர்களை, மீண்டும் பணிக்கு திரும்பச் செய்ய, அரசு அவர்களுக்கு பல சலுகைளை அளிக்க வேண்டும் என, மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் தவார் சந்த் கெலாட், தலைமையிலான அமைச்சர்கள் குழு, பிரதமர் நரேந்திர மோடியிடம், சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளன.


'ஆயுஷ்மான் பாரத்'தொழிலாளர் நலனுக்காக, தேசிய வேலைவாய்ப்பு திட்டம் வகுப்பது, குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கான நல நிதியம் உருவாக்குவது, அவர்களை 'ஆயுஷ்மான் பாரத்' மருத்துவக் காப்பீடு திட்டத்தில் இணைப்பது உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கி, அவர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப ஊக்குவிக்கலாம் என, பரிந்துரைக்கப்பட்டுள்ளது

.மேலும், கட்டடம் மற்றும் இதர கட்டுமான பணியாளர்கள் சட்டத்தில் பதிவு பெற தகுதி இருந்தும், இன்னும் பதிவு பெற்றிடாத இரண்டு கோடி தொழிலாளர்களை அதில் இணைப்பது, தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி கட்டணத்தில் தள்ளுபடி, பாட புத்தகங்கள், சீரூடை உள்ளிட்டவை இலவசமாக வழங்குதல் உள்ளிட்ட பல சலுகைகளை வழங்க, அமைச்சர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.தொழிலாளர் நலன் சார்ந்த பல திட்டங்களை அறிவிப்பதன் மூலம் மட்டுமே, வரவிருக்கும் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க முடியும் என, நிபுணர்கள் கருதுகின்றனர். - நமது சிறப்பு நிருபர் -Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
24-மே-202022:58:26 IST Report Abuse
தமிழ்வேல் கம்மியை கழுவி கழுவி ஊத்துனானுவோ. இப்போ தலையில தூக்கி வச்சிக்கிறானுவோ.
Rate this:
Cancel
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
24-மே-202018:17:57 IST Report Abuse
வாய்மையே வெல்லும் இப்ப்போவும் ஒன்றும் கெட்டு போகவில்லை தமிழக தொழிலாளர்களுக்கு வேலை காத்து இருக்கு.. சற்று முனைப்பு காட்டி கஷ்டப்பட்டு வேலைக்கு சென்றால் கூலி தொழிலில் நன்றாக சம்பாதிக்கலாம். என்ன சற்று கடினமாக தோன்றலாம் . இந்த சான்சை விட்டுவிட்டால் பெங்காலி /வடக்கு தொழிலாளர்கள் உங்களின் வேலையை தட்டிக்கொண்டு சென்று விடுவார்கள். வேலையை தக்கவைத்து கொள்வது தமிழனின் சாமர்த்தியம் . குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட்டு கடின உழைப்பிற்கு மனதை ஊக்கு வைத்து கொள்ளவேண்டும் .. தமிழக தொழிலாளர்களால் உங்கள் இல்லங்களில் மூன்றுவேளையிலும் நன்றாக உழைத்து சாப்பிட முடியும் ... நீங்கள் தான் மனது வைக்க வேண்டும்.. இப்போ விட்டால் வந்துவிடுவார்கள் பெங்காலிகள்.. ஜாக்கிரதை.. மிஸ் பண்ணாதீங்க.. கடுமையா உழைங்க.. வீட்டை குழந்தை குட்டியை காப்பாத்துங்க.. குடிய விடுங்க தமிழக மக்களே..
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
24-மே-202016:50:59 IST Report Abuse
J.Isaac புலம்பெயர் தொழிலாளர்கள் அல்ல அடிமைகள். அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால், இந்த மக்கள் வாழ்வாதாரம் , இவர்களது குழந்தைகளின் கல்வி அறிவு உயர அவரவர் மாநிலத்திலே வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X