விமர்சனங்களைத் தாண்டி தன்னிச்சையாக செயல்படும் சீன கம்யூனிஸ அரசு

Updated : மே 23, 2020 | Added : மே 23, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

பீஜிங் : உலகம் முழுக்க தற்போது 5.2 மில்லியன் பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். மூன்றரை லட்சம் பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். பிரேசிலில் 3 லட்சத்து 30 ஆயிரத்து 890 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பிரேசில் கொரோனா பாதிப்பில் ரஷ்யாவை முந்தி சென்றுள்ளது.



latest tamil news



உலகம் முழுக்க 80 மில்லியன் குழந்தைகள் டிப்தீரியா, மீசில்ஸ், போலியோவால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநா செய்து வெளியிட்டுள்ளது. உலக நாடுகளின் நிலமை இவ்வாறு இருக்க ஜன., மாதம் தொடங்கி சீனாவில் பாதிப்பு குறைந்த கொரோனா வைரஸ் தற்போது சீனாவில் இருந்து அடியோடு ஒழிந்துவிட்டதாகத் சீன ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சிகிச்சை எடுத்துக்கொண்டு இருப்பவர்கள் தவிர புதிதாக கொரோனா பாதிப்பு சீனாவில் யாருக்கும் ஏற்படவில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது. 4 ஆயிரம்பேர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக சீனா தெரிவித்து இருந்தது. அதிகரிக்கும் உயிரிழப்புகளை சீனா மறைக்கிறது என அமெரிக்கா முன்னதாக குற்றஞ்சாட்டி இருந்தது.

ஆனால் தாங்கள் உலக சுகாதார அமைப்பிடம் நல்லுறவில் இருந்து வருவதாகவும் அவ்வப்போது சீனாவின் உண்மை நிலையை பகிர்ந்து வருவதாகவும் சீனா கூறி இருந்தது.சீன கம்யூனிஸ கட்சி மீதும் அதன் அடக்குமுறை மீதும் கொரோனாவை முன்னிட்டு சீன குடிமக்கள் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். முன்னதாக சீனா 5 கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்தது. அதன்படி கொரோனா ஒழிப்பு, 2020-ம் ஆண்டுக்கான மொத்த கொள்முதல் உற்பத்தியை ரத்து செய்யும் முடிவு, வர்த்தக ஆலோசனை, பாதுகாப்பு நிதி அதிகரிப்பு, ஹாங் காங்கின் அதிகாரம் உள்ளிடவற்றை சீனா ஆய்வு செய்ய முடிவெடுத்தது.


latest tamil news



சீன கம்யூனிஸ ஆட்சி அகன்று அங்கு ஜனநாயகம் மலர வேண்டுமென சீன குடிமக்களில் பலர் விரும்புகின்றனர். 90 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க சீனா திட்டமிட்டு உள்ளது. நாட்டில் தற்போது 20 சதவீதம் பேர் வேலை இல்லாமல் திண்டாடி வருவதாக தகவல் வெளியானது. 20 லட்சம் வீரர்கள் கொண்ட மிகப்பெரிய ராணுவப்படை பலம் மிக்க நாடு சீனா. கொரோனாவால் சீனாவில் பொருளாதார சரிவு ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. ஹாங்காங், தைவான் நாடுகளை மேலும் கட்டுக்குள் கொண்டுவர புதிய மசோதாவை தாக்கல் செய்ய சீன கம்யூனிஸ அரசு முடிவெடுத்துள்ளது.

இது நிறைவேறினால் ஹாங்காங், தைவான் சீனாவின் சர்வாதிகாரத்துக்கு அடிபணிய வேண்டி இருக்கும். தென் சீன கடலில் ராணுவப் பயிற்சி மேற்கொள்ளும் சீனா, இந்தியா, தென் கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இது மேலும் நீடிக்குமெனத் தெரிகிறது. சீன கம்யூனிஸ அரசு உலக நாடுகள், குடிமக்கள் விருப்பத்தை எல்லாம் தாண்டி தன் செயல்பாடுகளில் மும்முரம் காட்டிவருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு ,இந்தியா
24-மே-202005:43:49 IST Report Abuse
NicoleThomson சீனா மிகத்தெளிவாக காய் நகர்த்தி வருது , ஆனா யானைக்கும் அடிசறுக்கும் அது எப்போது என்றுதான் காத்துள்ளேன் , இல்லுமினாட்டிகள் என்ன செய்யப்போகிறார்கள் , கமலஹாசனோ கேசரிவாளோ சொல்லுவார்களா/
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
24-மே-202003:58:01 IST Report Abuse
 ஜெய்ஹிந்த்புரம் இன்னிக்கி " பொருளாதார சரிவு ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது" ன்னு சலிச்சிக்குறீங்க.. - இது பொய்யா இல்லை நேற்று வந்த செய்தியில் "வெறும் 6.5 % மட்டுமே கூட்டியுள்ளனர்" ன்னு போட்டது பொய்யா?
Rate this:
Cancel
aryajaffna - Zurich,சுவிட்சர்லாந்து
24-மே-202003:12:28 IST Report Abuse
aryajaffna ஜனநாயகம் மலர்ந்தால் , வீடுகள் , உணவு இல்லாது வீதிகளில் உறங்கும் மிக பெரிய ஜனநாயக நாடுகளின் பட்டியலில் சீனாவும் வந்து விடும், "
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X