முகாமாக மாறிய அமேசான் தலைமையக கட்டடம்

Updated : மே 23, 2020 | Added : மே 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தின் சியேட்டல் நகரில் உள்ள அமேசான் தலைமையக கட்டடம் வீடற்றவர்களுக்கு முகாமாக மாற்றப்பட்டுள்ளது.சியேட்டல் நகரில் அமைந்துள்ள இந்த 8 மாடிக் கட்டடத்தின் ஒரு பகுதியில் அமேசான் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் மற்றொரு புறத்தில் வீடடற்றவர்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமேசான் மற்றும் மேரிஸ் பிளேஸ்

வாஷிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தின் சியேட்டல் நகரில் உள்ள அமேசான் தலைமையக கட்டடம் வீடற்றவர்களுக்கு முகாமாக மாற்றப்பட்டுள்ளது.latest tamil newsசியேட்டல் நகரில் அமைந்துள்ள இந்த 8 மாடிக் கட்டடத்தின் ஒரு பகுதியில் அமேசான் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் மற்றொரு புறத்தில் வீடடற்றவர்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமேசான் மற்றும் மேரிஸ் பிளேஸ் இணைந்து திறந்துள்ள இந்த முகாமில் 50 குடும்பங்கள் முதல் 100 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தற்போது 200 பேர் சமூக விலகலை கடைப்பிடித்து தங்கி வருகின்றனர்.


latest tamil news63,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த கட்டடத்தில் டைனிங் ஹால், சமையல் அறைகள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான பொழுது போக்கு அம்சங்கள் அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆண்டு ஒன்றிற்கு 1000 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பயன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
23-மே-202022:45:45 IST Report Abuse
தல புராணம் சியாட்டில் நகரின் வீட்டுமனை, அப்பார்ட்மெண்ட், வீடு இவைகளின் விலைகள் விண்ணில் முட்டக் கரணமாக இருந்த நிறுவனம் அமேசான். உள்ளூரில் இருக்கும் சிறு நிறுவனங்களில் குமாஸ்தா, சேல்ஸ்மென் போன்ற சாதாரண வேலை செய்து குடும்பம் நடத்தும் நடுத்தர, ஏழைக் குடும்பங்களால் அந்நகரில் வசிக்க முடியாமல் தெருவுக்கு வரக்காரணமாக இருக்கும் நிறுவனம் அமேசான். பணக்கார நாடு, மரகத மாநிலம் (Evergreen State) என்று பெருமைபாடும் இந்த இடத்தில தெருவில் வசிப்போர் எண்ணிக்கையை சில நூறு பேர் என்பதை மாற்றி பல ஆயிரம் பேர் என்று மாற்றியமைத்த சிறுமையில் அமேசானுக்கு பெரும் பங்கு உண்டு. ஏராளமான வேலைவாய்ப்புகள் ஏற்படுத்திய நிறுவனம் என்பது ஒரு புறம் இருந்தாலும், பல ஆயிரம் குடும்பங்களை நடுத்தெருவுக்கு கொண்டுவந்த இருண்ட பக்கங்களும் இந்த நிறுவனத்தின் பாதையில் உண்டு. இவைகளை கட்டுப்படுத்த, வீடற்றோர் பிரச்சினைகளை சமாளிக்க, சியாட்டில் நகரில் வேலைக்கு சேர்க்கும் ஒவ்வொரு ஊழியருக்கும் ஆண்டொன்றுக்கு ஒரு குறிப்பிட்ட (500 டாலருக்கும் கீழே) தொகை நகர வரியாக செலுத்தவேண்டும் என்ற ஒரு நடவடிக்கையை பணபலத்தால் தகர்த்த சிறுமையும் இந்த நிறுவனத்துக்கு உண்டு. அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அந்த நகரில் பெரிய பாலங்களுக்கு கீழே கூடாரம் போட்டு ஆயிரக்கணக்கானோர் சேரி வாழ்க்கை வாழ்கிறார்கள். வேலைக்கு சென்று சாப்பிடும் பலர், வாங்கும் சம்பளத்தில் விண்ணை எட்டிய வீட்டு வாடகை தரமுடியாமல் இருக்க இடம் இல்லாமல் தெருவில் தஞ்சம் புகுந்துள்ளனர். உலகின் பெரிய பணக்காரனாக இருந்தாலும், தனது அடுத்த தெருவில் வீடில்லாமல், அழுக்கு படிந்து 75 வயது முதியவர், மூக்கில் சளி ஒரு அங்குலத்துக்கு தொங்க, பச்சை குழந்தை போல, அந்த மேடான சாலையில் நடக்கமுடியாமல், எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் "கடவுளே, கடவுளே" என்று முனகிக்கொண்டு, குளிரெடுக்கும் அந்த காலை வேளையில் (பிப்ரவரி 26, 2020) ஒருவேளை காலை உணவுக்கு கையேந்தும் நிலையில் இருக்கிறார் என்பதை தெரிந்தும் ஜெஃப் போஜோஸ் எப்படி நிம்மதியாக தூங்குகிறார் என்பது ஆச்சரியம் தான். அந்த கடவுளுக்கும் கூட இது போன்ற பல முதியவர்கள் பலநாடுகளில் துன்புறுகிறார்கள் என்பதும் தெரியாமல் எப்படி இன்னமும் கடவுள் போஸ்டில் இருக்கிறார் என்பதும் ஆச்சரியம். அந்த முதியவரை கண்ணால் கண்டு கண்ணீர் வடித்ததால் எழுத்தில் கொண்டுவர முடிந்தது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X