உள்நோக்கத்துடன் குறை கூறுகின்றனர்: ஊக்கச் சலுகை குறித்து விளக்கம்

Updated : மே 25, 2020 | Added : மே 23, 2020 | கருத்துகள் (33)
Share
Advertisement
உள்நோக்கத்துடன் குறை கூறுகின்றனர்:  ஊக்கச் சலுகை குறித்து  விளக்கம்

புதுடில்லி : ''மத்திய அரசு அறிவித்துள்ள, ஊக்கச் சலுகை திட்டத்தை புரிந்து கொள்ள முயற்சிக்காமல், அவற்றில் ஏதாவது ஓட்டை உள்ளதா என்ற உள்நோக்கத்துடன், சிலர் குறை கூறுகின்றனர்,'' என, மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மத்திய அரசு அறிவித்த, 20 லட்சம் கோடி ரூபாய் ஊக்கச் சலுகை திட்டம், மிகக் குறைவான, காலதாமத நடவடிக்கை என, எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

நிதிச் சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரித்து, மக்கள் கைகளுக்கு சிறிதளவு பணம் சென்றடையவும், நாட்டின் பொருளாதார மீட்சிக்கும், ஊக்கச் சலுகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமான திட்டங்களை அறிவித்துள்ளன. அவற்றுக்கும், நம் ஊக்கச் சலுகை திட்டத்திற்கும் பெரிய வித்தியாசமில்லை.அனைத்து நாடுகளின் ஒரே குறிக்கோள், நிதிச் சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்பது தான். மக்களிடம் பணம் புரண்டால், தேவை தானே அதிகரித்து, பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.ஊக்கச் சலுகை திட்டத்தில், வாகனம், பொழுதுபோக்கு உட்பட எந்த ஒரு துறையையும் கைவிடவில்லை.

எந்த துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும், வங்கியில் கடன் பெறலாம்.நடுத்தர வருவாய் பிரிவினருக்கு எந்த சலுகையும் அறிவிக்கவில்லை என்பதையும் மறுக்கிறேன். அவர்களுக்கு, கடன் தவணை சலுகை, வருமான வரி விகித மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.கொரோனா தாக்கத்தின் அடிப்படையில், மத்திய அரசின் அடுத்த கட்ட பொருளாதார செயல் திட்ட நகர்வு இருக்கும். சிலர், ஊக்கச் சலுகை திட்டத்தின் நோக்கத்தை புரிந்து கொள்ளாமல், அதில் குறை காணவே விரும்புகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.



Advertisement


வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arun - chennai,இந்தியா
25-மே-202009:42:41 IST Report Abuse
arun ஒன்னு ரெண்டுன்னா பரவா இல்லை.. பதி மூணும் ஜோக்கர் நா என்ன பண்றது?
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
24-மே-202020:59:42 IST Report Abuse
Rajas புலம் பெயர்ந்த மக்களின் நிலை கண்டு வந்துபவர்கள் அவர்களின் சூட்கேஸ்களை தூக்கி கூடவே செல்லலாம் என்று நீங்கள் சொன்னதை கூட உள்நோக்கத்துடன் சொல்கிறார்கள். என்ன செய்வது. இதற்க்கெல்லாம் வருந்த கூடாது.
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
24-மே-202020:52:57 IST Report Abuse
Rajas ////உள்நோக்கத்துடன் குறை கூறுகின்றனர்/// எதிர்க்கட்சியினர் சொன்னால் பரவாயில்லை. மக்கள் சொல்கின்றனர். அதை விட உங்கள் சொந்த கட்சியினரே உங்கள் பொருளாதார திறமை பற்றி சொல்கின்றனர். சு.சாமி ஒரு படி மேலே போய் வெளுத்து வாங்குகிறார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X