சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

எடுபடுமா பழைய 'சென்டிமென்ட்?'

Added : மே 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 எடுபடுமா பழைய 'சென்டிமென்ட்?'

எடுபடுமா பழைய 'சென்டிமென்ட்?'

'இந்த மனிதர், இவ்வளவு சுறுசுறுப்பாக இருப்பார் என, கனவில் கூட நினைக்கவில்லை. அடுத்த தேர்தலில், நாம் ஆட்சியைப் பிடிப்பது சற்று சிரமம் தான்' என, கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயனின் நடவடிக்கைகளைப் பார்த்து, சோகத்துடன் கூறுகின்றனர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த, காங்., நிர்வாகிகள். கேரளாவில், இந்த தேர்தலில், மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சியை பிடித்தால், அடுத்த தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும். இந்த இரண்டு கட்சிகள் தான், மாறி மாறி ஆட்சிக்கு வரும். தற்போது, பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சியில் உள்ளதால், அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், ஆட்சி அமைக்கும் வாய்ப்பு, தங்களுக்கே கிடைக்கும் என, காங்கிரஸ் கட்சியினர் தெம்பாக வலம் வந்தனர்.
ஆனால், கொரோனா வைரஸ், காங்கிரஸ் கட்சியினரின் நம்பிக்கைக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும் போலிருக்கிறது. நாட்டிலேயே முதலாவதாக, கேரளாவில் தான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அதிக அளவில் வைரஸ் பரவி விடுமோ என, கேரள மக்கள் பயந்தனர். ஆனால், பினராயி விஜயன் நிதானமாகவும், சாமர்த்தியமாகவும் அதிகாரிகளை வேலை வாங்கி, பாதிப்பை பெருமளவு கட்டுப்படுத்தி விட்டார். இதனால், கேரள ஊடகங்கள், அவரை பாராட்டித் தள்ளுகின்றன. ஆட்சிக் கனவில் இருந்த, காங்., கட்சியினரோ, 'அடுத்த தேர்தலுக்கு, பழைய, 'சென்டிமென்ட்' வேலைக்கு ஆகாது. கடுமையாக உழைக்க வேண்டும்' என, புலம்புகின்றனர்.


இது தேவையா?'வாயை கொடுத்து, வம்பில் சிக்கினால் நாம் என்ன செய்ய முடியும்' என, தங்கள் கட்சி தலைவர் சோனியா பற்றி முணுமுணுக்கின்றனர், கர்நாடக மாநில காங்.,
நிர்வாகிகள். கொரோனா பிரச்னை குறித்து சமீபத்தில் பேசிய சோனியா, 'வைரசை கட்டுப்படுத்தும் விஷயத்தில், மத்திய அரசு சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை.புலம்பெயர் தொழிலாளர்களை, சாலைகளில் தவிக்க விட்டு விட்டனர்' என, ஆவேசமாக கூறினார். அத்துடன் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை.'கொரோனா நிவாரண நிதியாக, பிரதமர் நிதிக்கு கோடிக்கணக்கில் பணம் குவிந்துள்ளது. ஆனால் அதை, கொரோனா பாதிப்புக்காக பயன்படுத்துவதாக தெரியவல்லை. பிரதமரின் அடுத்த கட்ட வெளிநாட்டு பயணங்களுக்காக பயன்படுத்துவர் போலிருக்கிறது' என்றும், அணுகுண்டை துாக்கி வீசினார் சோனியா. இந்த விஷயம் தான், தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 'பிரதமர் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக சோனியா, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்' என, கர்நாடகா மாநில, பா.ஜ., நிர்வாகி ஒருவர், போலீசில் புகார் அளிக்க, போலீசாரும், சோனியாவுக்கு எதிராக, எப்.ஐ.ஆர்., பதிவு
செய்துள்ளனர். பீதியடைந்த கட்சி மேலிட தலைவர்கள், 'எப்படியாவது வழக்கை வாபஸ் பெறச் சொல்லுங்கள்' என, உத்தரவிட்டதால், போலீஸ் ஸ்டேஷனுக்கு அலைந்து திரிகின்றனர், கர்நாடக மாநில காங்., நிர்வாகிகள். 'கொரோனா காலத்தில் இந்த அம்மாவுக்கு இது தேவை தானா...' என, முணுமுணுக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suppan - Mumbai,இந்தியா
24-மே-202016:52:43 IST Report Abuse
Suppan பிரதமரின் உள்நாட்டு வெளிநாட்டுப் பயணச்செலவுகள் அரசின் பொறுப்பு. PMCARES நிதியிலிருந்துதான் செலவழிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. கொரோனா தாக்கம் இருக்கும்வரை வெளிநாட்டுப் பயணம் இருக்காது என்று தெரிந்தும் இந்த அம்மிணி எதற்காகத் தேவையில்லாமல் வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்கிறார்? ராகுலின் தாக்கமோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X