சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

வட மாநில தொழிலாளர்களிடம், 'ஆட்டை!'

Added : மே 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
வட மாநில தொழிலாளர்களிடம், 'ஆட்டை!'''மரம் விற்குற, 'டெண்டர்'ல மோசடி பண்ண பார்க்குறாங்க...'' என்றபடியே, திண்ணையில் அமர்ந்தார் அந்தோணிசாமி.''என்ன ஓய் சொல்றீர்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''வீட்டுவசதி வாரியம் சார்புல, புதுக்கோட்டை மாவட்டம் முள்ளூருல, துணை நகரம் அமைக்க போறாங்க... இதுக்காக, கால்நடை துறையிடம் இருக்குற நிலங்களை, குறைஞ்ச விலைக்கு
 வட மாநில தொழிலாளர்களிடம், 'ஆட்டை!'


வட மாநில தொழிலாளர்களிடம், 'ஆட்டை!'

''மரம் விற்குற, 'டெண்டர்'ல மோசடி பண்ண பார்க்குறாங்க...'' என்றபடியே, திண்ணையில் அமர்ந்தார் அந்தோணிசாமி.
''என்ன ஓய் சொல்றீர்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''வீட்டுவசதி வாரியம் சார்புல, புதுக்கோட்டை மாவட்டம் முள்ளூருல, துணை நகரம் அமைக்க போறாங்க... இதுக்காக, கால்நடை துறையிடம் இருக்குற நிலங்களை, குறைஞ்ச விலைக்கு வாங்கியிருக்காங்க...
''இந்த நிலத்துல இருக்கற மரங்களை வெட்டி விக்கலாமுன்னு, வாரிய அதிகாரிகள், 'பிளான்' பண்ணிருக்காங்க... அதுல, 100 ஆண்டு பழமையான மரங்கள் கூட இருக்குதுங்க...
''ஆனா, மரங்களோட மதிப்பை குறைச்சு, 16 லட்ச ரூபாய்க்கு டெண்டர் விடுறதுக்கு, அதிகாரிகள் வேலை பார்த்துட்டு இருக்காங்க...
''இப்படி டெண்டர் விட்டா, வாரியத்துக்கு, 2 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும்னு பேசிக்கிறாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.''ராத்திரியிலும், அமைச்சர் கிளம்பிடறார் ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், குப்பண்ணா.
''என்னப் பா சொல்லுறே...'' என, அதிர்ச்சியுடன் கேட்டார், அன்வர்பாய்.
''சென்னையில வேலை இல்லாதப்போ, வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், மதுரைக்கு கிளம்பி போயிடறார்... அங்க, மக்களுக்கு, நிவாரண பொருட்களை
கொடுக்கறார்...
''தினமும் ராத்திரி, 8:00 மணிக்கு, கலெக்டர் ஆபீசுக்கு போறார்... கலெக்டர் வினய், மாநகராட்சி கமிஷனர் விசாகன், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தறார்...
''பல நாள், ராத்திரி, 10:00 மணியை தாண்டியும், கூட்டம் நடக்கறது ஓய்...''அமைச்சர், கொஞ்சம் ஓவராத் தான் போறார்ன்னு, கலெக்டர் ஆபீசுல பேசிக்கறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''என்ன இருந்தாலும், இந்த அதிகாரிங்க, இப்படி பண்ணக் கூடாது வே...'' என, கடைசி தகவலுக்கு மாறினார், அண்ணாச்சி.''என்ன விபரமுன்னு சொல்லு பா...'' எனக் கேட்டார்,
அன்வர்பாய்.
''சென்னை சுற்று வட்டாரங்களில் வேலை பார்த்த, 400க்கும் மேற்பட்ட, வடமாநில தொழிலாளர்களை, 17ம் தேதி ராத்திரி, ரயிலில், அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்ப, அரசு ஏற்பாடு செஞ்சது வே...
''அதற்காக, செங்குன்றம் பக்கத்துல இருக்கற பாடியநல்லுாருல இருந்து, பஸ்ல அவங்களை, திருவள்ளூர் ரயில் நிலையத்துக்கு அனுப்புற வேலையில, பொன்னேரி தாலுகா அதிகாரிகளும், போலீசாரும் ஈடுபட்டாவ வே...
''அந்த தொழிலாளர்கள்ல, 50 பேருகிட்ட, சைக்கிள் இருந்துச்சு... அதை, ஊருக்கு எடுத்துட்டு போக முடியாதுன்னு, விக்குறதுக்கு முடிவு பண்ணினாவ வே...
''இதை புரிஞ்சிட்ட, வருவாய் துறையினரும், போலீசாரும், 1,000 முதல், 2,000 ரூபாய்க்கு, அந்த சைக்கிள்கள, 'அடிமாட்டு' விலைக்கு வாங்கிருக்காவ வே...
''அதுலையும் சில பேரு, 'நாங்கள் அனுமதிச்சா தான், நீங்கள் ஊருக்கே போக முடியும்'முன்னு மிரட்டி, 10 புதிய சைக்கிள்களை, 10 ஆயிரம் ரூபாய்க்கு பறிச்சிக்கிட்டாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
''இவாளை எல்லாம் திருத்தவே முடியாது ஓய்...'' என்றபடியே, குப்பண்ணா கிளம்ப, நண்பர்களும் நடையைக் கட்டினர்.

நெல் கொள்முதல் நிலையங்களில் கறார் வசூல்!
''உதயநிதிக்கே அல்வா குடுத்துட்டாரேன்னு ஆச்சரியப்படுறாங்க பா...'' என, அண்ணாச்சி வீட்டு வாசல் முன், அரட்டையை ஆரம்பித்தார், அன்வர்பாய்.
''யாருங்க அந்த கில்லாடி...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''தி.மு.க., இளைஞர் அணிச் செயலர் உதயநிதி, கொரோனா ஊரடங்கால பாதிக்கப்பட்ட, ஏழை, எளியவங்களுக்கு நிவாரணம் வழங்குற நிகழ்ச்சியை நடத்திட்டு இருக்கார்...
''சமீபத்துல, மாதவரம் தொகுதி, சடையங்குப்பம் பர்மா நகர்ல, நலத்திட்ட உதவிகள் வழங்குற நிகழ்ச்சிக்கு, வடசென்னை மாவட்ட, தி.மு.க., செயலர் சுதர்சனம் ஏற்பாடு செஞ்சிருந்தாரு பா...
''ஸ்டாலின் மகன் கலந்துக்கிறதால, நிகழ்ச்சிக்கு பிரமாண்ட ஏற்பாடு பண்ணியிருப்பார்னு, உதயநிதி தரப்புல நினைச்சிருந்தாங்க... ஆனா, அங்க சொற்ப அளவுல தான் கூட்டம் இருந்துச்சு பா...
''அதுலயும், அரிசி, காய்கறி, ஒரு முகக் கவசம், இரண்டு முட்டைகளை மட்டும் உதயநிதி மூலமா, சுதர்சனம் குடுக்க வச்சார்... தர்மசங்கடத்துக்கு ஆளான உதயநிதி, போட்டோவுக்கு போஸ் கூட குடுக்காம, நழுவிட்டாரு பா...'' என்றார், அன்வர்பாய்.
''திராவிடக் கட்சிகள் மாதிரி, நிவாரண உதவிகளை வழங்கிண்டு இருக்கா ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு தாவினார் குப்பண்ணா.''எந்தக் கட்சியை சொல்லுதீரு...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''மதுரை, பா.ஜ.,வினரை தான்... ஊரடங்கால பாதிக்கப்பட்டவாளுக்கு, நிவாரண பொருட்கள் வழங்கறதுல ஆர்வமா செயல்படறா ஓய்...''மோடி கிச்சன் அமைச்சு, தினமும் நிறைய பேருக்கு உணவு பொட்டலங்களை வழங்கிண்டு இருக்கா... இது தவிர, மளிகை பொருட்கள் தொகுப்பு, லட்சக்கணக்கான முகக் கவசங்களையும் வழங்கியிருக்கா ஓய்...
''கடந்த, 40 நாட்கள்ல, 2.30 லட்சம் பேருக்கு நிவாரண பொருட்களை வழங்கியிருக்கறதா, தலைமைக்கு அறிக்கை அனுப்பிச்சிருக்கா...
''இதுக்காக, மதுரை மாநகர, பா.ஜ., நிர்வாகிகளை, மாநில தலைவர் முருகன் ரொம்பவே பாராட்டியிருக்கார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''கொரோனாவால கஷ்டப்படுற சூழல்லயும், வசூல் வேட்டை நடத்துதாவ வே...'' என, கடைசி மேட்டருக்கு வந்தார், அண்ணாச்சி.
''பாடுன வாயும், ஆடுன காலும் சும்மா இருக்காதுங்கிற மாதிரி, வாங்குன கையும் சும்மா இருக்காதுங்க...'' எனக் கூறிச் சிரித்தபடியே, மேலே தொடரும்படி, சைகை செய்தார் அந்தோணிசாமி.
''திருவள்ளூர் மாவட்டத்துல, விவசாயிகள் உற்பத்தி செய்த நெல் மூட்டைகளை வாங்க, தமிழ்நாடு வாணிப கழகம் மூலம், 11 இடங்கள்ல நேரடி கொள்முதல் நிலையம் திறந்திருக்காவ...
''இங்க, 40 கிலோ அடங்கிய ஒரு சிப்பம் நெல்லுக்கு, 740 ரூபாய் விலை நிர்ணயம் செய்திருக்காவ... ஆனா, கொள்முதல் நிலையத்துல இருக்கிற அலுவலர்கள், ஒரு சிப்பத்துக்கு, 50 ரூபாய் வரை, வசூல் பண்ணுதாவ வே...
''எதுக்குன்னு கேட்டா, 'வாடகை, உயர் அதிகாரிகள், உள்ளூர் பஞ்சாயத்து தலைவருக்கு கொடுக்கணும்'னு நீண்ட பட்டியலை வாசிக்காவ... ''இப்படி, ஒவ்வொரு விவசாயிகளும், ஆயிரக்கணக்கான ரூபாயை, கொள்முதல் நிலைய அதிகாரிகளுக்கு, 'அழுதுட்டு' போறாவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.
பேச்சு முடியவும், நண்பர்கள் நகர்ந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-மே-202008:39:01 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு "வட மாநில தொழிலாளர்களிடம், 'ஆட்டை'" ரெயில்ல டிக்கெட்டே வாங்காம போற பயலுவ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X