ஜூனில் பிரிட்டனுக்கு வரும் பயணிகள் ; 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த நடவடிக்கை

Updated : மே 23, 2020 | Added : மே 23, 2020
Share
Advertisement

லண்டன் : கொரோனா பரவுவதை தடுக்க ஜூன் மாதம் முதல் பிரிட்டனுக்கு வரும் பயணிகள் 14 நாட்களுக்கு தொடர்ந்து தனிமைப்படுத்தப்படுவார்கள் என அந்நாட்டின் உள்துறை செயலர் தெரிவித்தார்.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்காவை தொடர்ந்து, பல ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா கோர தாண்டவம் ஆடி ஆயிரக்கணக்கான உயிர்களை கொன்று குவித்தது. பிரிட்டனிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து பலி எண்ணிக்கை சராசரியாக 10,000 கடந்து செல்கிறது. கொரோனா தொற்று பரவ துவங்கியது முதல் உலகின் பல நாடுகளும் தங்களது நாட்டில் இருக்கும் மாநில மற்றும் மாவட்ட எல்லைகள் என அனைத்தையும் மூடியது. ஆனால் பிரிட்டனில் எல்லைகள் மூடப்படவில்லை.

இந்நிலையில் பிரிட்டனில் நோய் பாதிப்பு தொடர்பாக உள்துறை செயலர் பிரிதி படேல் கூறியதாவது : கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் நிலையில், தற்போது, பிற நாடுகளில் இருந்து பிரிட்டனுக்கு திரும்பும் பயணிகளால் நோய் தொற்று பரவாமல் இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறோம். நாங்கள் நாட்டின் எல்லை பகுதிகளை மூடவில்லை. நோய் பரவுவதைகட்டுக்குள் வைக்கவே, பிரிட்டனுக்கு வரும் நபர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அயர்லாந்தை தவிர, ஜூன் 8 முதல் பிற நாடுகளில் இருந்து திரும்பும் பயணிகள் 14 நாட்களுக்கு தனித்திருக்க வேண்டும். விதிமீறி செயல்பட்டாலோ , அரசின் நடவடிக்கையை ஏற்க மறுத்தாலோ அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு தெரிவித்தார்.


latest tamil news



ஊரடங்கு விதிகளில் தளர்வுகள் அளித்து படிப்படியாக, சில நாடுகளில் விமான சேவை துவங்க உள்ளநிலையில் இப்படியொரு அறிவிப்பை பிரிட்டன் அரசு வெளியிட்டது. இதனால் பயணிகளின் வருகை குறைவால் பொருளாதார நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X