தமிழகத்திற்கு ஏசி அல்லாத ரயில் இயக்க அரசு கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்திற்கு ஏசி அல்லாத ரயில் இயக்க அரசு கோரிக்கை

Updated : மே 23, 2020 | Added : மே 23, 2020 | கருத்துகள் (3)
Share
சென்னை: தமிழகத்திற்கு ஏசி அல்லாத 4 சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என ரயில்வே வாரியத்திற்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது: கோவை- மயிலாடுதுறை மதுரை -விழுப்புரம் , திருச்சி -நாகர்கோாவில் , கோவை-காட்பாடி ஆகிய வழித்தடங்களில் ஏசி அல்லாத சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என தமிழக அரசு ரயில்வே வாரியத்திடம் கோரிக்கை வைத்துள்ளது. கடந்த

சென்னை: தமிழகத்திற்கு ஏசி அல்லாத 4 சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என ரயில்வே வாரியத்திற்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து கூறப்படுவதாவது: கோவை- மயிலாடுதுறை மதுரை -விழுப்புரம் , திருச்சி -நாகர்கோாவில் , கோவை-காட்பாடி ஆகிய வழித்தடங்களில் ஏசி அல்லாத சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என தமிழக அரசு ரயில்வே வாரியத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.



latest tamil news



கடந்த சில தினங்களுக்கு முன்னர் டில்லியில் இருந்து சென்னை உள்ளிட்ட 15 முக்கிய நகரங்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. கொரோனாதாக்கம் தமிழகத்தில் அதகரித்து இருப்பதால் சிறப்பு ரயில் தமிழகத்திற்கு இயக்கப்பட வேண்டாம் எனதமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. மாநில அரசின் கோரிக்கையை ரயில்வே நிர்வாகம் ஏற்றுக்கொண்டது. அதே நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து வடமாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.


latest tamil news



இந்நிலையில் கோவை ,மதுரை திருச்சி, உள்ளிட்ட நகரங்களுக்கு ஏசி அல்லாத சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X