கொச்சி: வந்தே பாரத் மிஷனில் ஓமன் தலைநகர் மஸ்கட்டிலிருந்து 177 இந்தியர்கள் கேரள மாநிலம் கொச்சி வந்தடைந்தனர்.
ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள், மாணவர்கள், சுற்றுலா மற்றும் உறவினர்களை பார்க்கச் சென்றவர்கள், விசா காலம் முடிந்தும், அங்கு தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை அழைத்துவர சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. 'வந்தே பாரத்' என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசு இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், ஓமன் தலைநகர் மஸ்கட்டிலிருந்து, 177 இந்தியர்கள், ஏர் இந்தியா சிறப்பு விமானம்(IX 442) மூலம் கேரள மாநிலம் கொச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களுக்கு விமான நிலையத்தில் உடல் பரிசோதனை நடத்தப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE