ஆந்திராவில் ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா தொற்று

Updated : மே 23, 2020 | Added : மே 23, 2020
Share
Advertisement

அமராவதி : ஆந்திராவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து, கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 47 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்தது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆந்திராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கடந்த 24 மணிநேரத்தில் (ஒரே நாளில்) புதிதாக 47 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் மாநிலத்தில் பாதிக்கப் பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,561 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் ஒரே நாளில் 9,136 பேர் கொரோனாவிற்கான பரிசோதனையை செய்தனர். பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் சென்னை கோயம்பேடு பகுதியில் இருந்து திரும்பியவர்கள். மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 727 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். 153 பேர் வெளி மாநில தொழிலாளர்கள் என்பது தெரிய வந்துள்ளது.


latest tamil news



மேலும் மாநிலத்தில் 1,778 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் கிருஷ்ணா மாவட்டத்தில் கொரோனாவால் ஒரு நபர் பலியாகினார். இதையொட்டி, பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 56 ஆக உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X