பொது செய்தி

தமிழ்நாடு

கிளியனுார் ஊராட்சியில் நிவாரணம் வழங்கல்

Added : மே 23, 2020
Share
Advertisement

சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு அடுத்த கிளியனுார் ஊராட்சியில் 800 குடும்பங்களுக்குநிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.கீரப்பாளையம் ஒன்றியம், கிளியனுார் ஊராட்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஊராட்சித் தலைவர் சத்யா வைரமணி தலைமை தாங்கினார்.கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலகிருஷ்ணன், ஒரத்துார் சப்இன்ஸ்பெக்டர் அபுஇப்ராகிம், முருகன், ஒன்றிய கவுன்சிலர் கவிதா கமலக்கண்ணன், துணைத்தலைவர் கிருபாவதி ராசு, வார்டு உறுப்பினர்கள் கவுசல்யா கபிலன், ராஜசரண்யா சுரேஷ், வீராசாமி, பத்மாவதி, பாரதிராஜா, உமாகந்தன் மற்றும் ஜனகம், கலைவாணன், காமராஜ் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் செந்தில்நாதன் வரவேற்றார்.கீரப்பாளையம் ஒன்றிய சேர்மன் கனிமொழி தேவதாஸ் படையாண்டவர், துணை சேர்மன் காஷ்மீர்செல்வி விநாயகம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பொதுமக்கள், துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரணப்பொருட்களை வழங்கினர்.ஊராட்சியில் உள்ள 800 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி, 5 கிலோ காய்கறி வழங்கினர்.இதில் பொதுமக்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X