பொது செய்தி

தமிழ்நாடு

நெசவாளர்களுக்கு நிவாரணம் அ.தி.மு.க., சார்பில் வழங்கல்

Added : மே 23, 2020
Share
Advertisement

நடுவீரப்பட்டு; சி.என்.பாளையத்தில் அமைச்சர் சம்பத் செலவில் கைத்தறி நெசவாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.சி.என்.பாளையம், நடுவீரப்பட்டு பகுதியில் உள்ள கைத்தறி நெசவாளர்கள் ஊரடங்கால், தொழில் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டனர்.தகவலறிந்த அமைச்சர் சம்பத் தமது சொந்த செலவில் கைத்தறி நெசவாளர்களுக்கு அரிசி, காய்கறிகள் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டார்.அதன்படி, பிரவீன் சம்பத் அறிவுறுத்தலின்பேரில், நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம் பகுதியில் உள்ள 240 கைத்தறி நெசவாளர்களுக்குநிவாரணம் வழங்கப்பட்டது.சி.என்.பாளையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் மாவட்ட சேர்மன் மல்லிகா வைத்திலிங்கம் தலைமை தாங்கினார்.முன்னாள் ஊராட்சி தலைவர் வைத்திலிங்கம் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில் சி.என்.பாளையம் ஊராட்சி தலைவர் மங்கலம் வேல்முருகன், கடலுார் மாவட்ட கைத்தறி பிரிவு அண்ணா தொழிற்சங்க தலைவர், நடுவீரப்பட்டு கைத்தறி கூட்டுறவு சங்க தலைவர் ராமலிங்கம், கைத்தறி பிரிவு அண்ணா தொழிற்சங்க செயலாளர் வேலு, குமளங்குளம் ஒன்றிய கவுன்சிலர் குருநாதன், கைத்தறி நெசவாளர் சங்க தலைவர்கள் ரங்கநாதன், சங்கர், ராஜமாணிக்கம் மற்றும் துணைத்ததலைவர்கள் இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் சி.என்.பாளையம் ஊராட்சி துப்பரவு பணியாளர்கள் மற்றும் துாய்மை காவலர்களுக்கு மல்லிகா வைத்திலிங்கம் நிவாரணம் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X