பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., சார்பில்500 பேருக்கு நிவாரணம்

Added : மே 23, 2020
Share
Advertisement

கடலுார்; கடலுாரில் அ.தி.மு.க., சார்பில் மாவட்ட முன்னாள் எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலர் கார்த்திகேயன், 500க்கும் மேற்பட்டோருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவின்படி கடலுார் மாவட்ட முன்னாள் எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலர் கார்த்திகேயன் தலைமை தாங்கி, ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், பந்தல் தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்கள் என 500க்கும் மேற்பட்டோருக்கு தலா 5 கிலோ அரிசி, காய்கறி, முகக் கவசம் வழங்கினார். மேலும், கொரோனா நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளி நடைமுறையை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.திருப்பாதிரிப்புலியூரில் நடந்த நிகழ்ச்சியில் 27 வது வார்டு பிரதிநிதி பாலா, முன்னாள் பிரதிநிதி நடராஜன், சரவணன், வடிவேலு, சதீஷ், கார்த்திக், ராஜா, கஜேந்திரன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X