சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மரம் வெட்டி கடத்திய வேன் சிறைப்பிடிப்பு

Added : மே 23, 2020
Share
Advertisement

விருத்தாசலம்; விருத்தாசலம் அருகே ஏரியில் இருந்த கருவேல மரங்களை வெட்டி கடத்திய டெம்போ வேனை, அப்பகுதி இளைஞர்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு நிலவியது.விருத்தாசலம் அடுத்த கோ.பூவனுார் கிராமத்தில் 200 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் உள்ள கருவேல மரங்களை மர்ம நபர்கள் சிலர் வெட்டி, டெம்போவில் கடத்துவதாக, கிராம மக்க ளுக்கு நேற்று தகவல் கிடைத்தது.அதன்பேரில், நேற்று பகல் 2:00 மணியளவில், அக்கிராமத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள், கருவேல மரங்களை வெட்டி, கடந்திய டெம்போவை சிறைபிடித்தனர்.தகவலறிந்து வந்த ஊராட்சி தலைவர் சிவராமன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், சட்டவிரோதமாக கருவேல மரங்கள் வெட்டி கடத்திய டெம்போவை, போலீசில் ஒப்படைப்பதாக உறுதியளித்தார்.அதன்பேரில், இளைஞர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X