பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்கள்வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பு

Added : மே 23, 2020
Share
Advertisement
கடலுார்: கடலுாரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பிளஸ் 2 விடைத்தாள்கள், வெளி மாவட்ட திருத்தும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு கடந்த மார்ச் 2ம் தேதி துவங்கி, 24 வரை நடந்தது. மாவட்டத்தில் உள்ள நான்கு கல்வி மாவட்டங்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர். தேர்வுகள் முடிந்ததும், கடலுார் உள்ளிட்ட 6 மாவட்டங்களின் விடைத்தாள்கள், கடலுார்

கடலுார்: கடலுாரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பிளஸ் 2 விடைத்தாள்கள், வெளி மாவட்ட திருத்தும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு கடந்த மார்ச் 2ம் தேதி துவங்கி, 24 வரை நடந்தது. மாவட்டத்தில் உள்ள நான்கு கல்வி மாவட்டங்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர். தேர்வுகள் முடிந்ததும், கடலுார் உள்ளிட்ட 6 மாவட்டங்களின் விடைத்தாள்கள், கடலுார் செயின்ட் ஜோசப் பள்ளியில் பாதுகாக்கப்பட்டு வந்தது.ஏப்ரல் மாதம் திருத்தும் பணி துவங்க இருந்த நிலையில், கொரோனாவால், வரும் 27 ம் தேதி துவங்குகிறது. அதற்கான ஏற்பாடுகளில் கடலுார் மாவட்ட கல்வித்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. முதன்மை கல்வி அதிகாரி ரோஸ் நிர்மலா முன்னிலையில், இங்கிருந்து வெளி மாவட்டங்களில் விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு விடைத்தாள்கள் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.கடலுார் மாவட்டத்தில் விடைத்தாள் திருத்த ஏற்கனவே 3 மையங்கள் ஏற்பாடு செய்திருந்த நிலையில், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டிய சூழலில், 8 மையங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.இப்பணியில் 1,800 ஆசிரியர்கள் ஈடபட உள்ளனர் என்றும், ஒரு அறையில் 8 ஆசிரியர்கள் மட்டுமே அமர்ந்து விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுவார்கள், அவர்கள் வந்து செல்ல போக்குவரத்து வசதி செய்து தரப்படும் எனவும் கலெக்டர் அன்புச்செல்வன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X