டிராக்டர் கவிழ்ந்து வாலிபர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டிராக்டர் கவிழ்ந்து வாலிபர் பலி

Added : மே 23, 2020
Share

திருக்கோவிலுார்; அரகண்டநல்லுார் அருகே டிராக்டர் கவிழ்ந்து வாலிபர் இறந்தார்.அரகண்டநல்லுார் அடுத்த தண்டரை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் மகன் நவீன்குமார், 22; அதே ஊரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருக்கு சொந்தமான டிராக்டரை நவீன்குமார், உழவு ஓட்ட ஒட்டம்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தார்.முனுசாமி என்பவர் நிலத்தின் அருகே சென்றபோது டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் நவீன்குமார் பலத்த காயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை, பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்த புகாரின் பேரில் அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X