பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு பணியில் நெடுஞ்சாலை: எஸ்.பி., ஜெயக்குமார் பேச்சு

Added : மே 23, 2020
Share
Advertisement

விழுப்புரம்: கொரோனா தடுப்பு பணியில், நெடுஞ்சாலை ரோந்து போலீசாரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது என எஸ்.பி., ஜெயக்குமார் தெரிவித்தார்.விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள போலீஸ் மைதானத்தில், நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், மாவட்டத்தில் நெஞ்சாலை ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 6 டெம்போ டிராவலர் மற்றும் 6 போலீஸ் ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் தணிக்கை மேற்கொள்ளப்பட்டன.விழுப்புரம் மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார், போலீஸ் வாகனங்களை நேரில் ஆய்வு செய்து, பார்வையிட்டார். பின்னர், நெடுஞ்சாலை ரோந்து பணியில் உள்ள போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு, நோய் தொற்று கிரிமி நாசினி பொருட்கள் மற்றும் முக கவசம் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கி, பேசுகையில், 'கொரோனா தடுப்பு பணியில், நெடுஞ்சாலை ரோந்து போலீசாரின் பங்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. தேசிய நெடுஞ்சாலைகளில், விபத்து ஏற்படுவதைத் தடுப்பது மட்டுமின்றி, விபத்து காலங்களில் உடனடி மீட்பு பணியை போலீசார், தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும்.மாவட்டத்தில் இருந்து அனுமதியின்றி, சரக்கு வாகனங்களில் பயணிக்கும் பொதுமக்களை கண்டறிய வேண்டும். அரசு உத்தரவின்படி, குறிப்பிட்ட நேரத்தில், கடைகள் திறக்கப்பபடுவதை கண்காணிக்க வேண்டும்' என்றார்.ஆய்வின்போது, ஏ.டி.எஸ்.பி., சரவணகுமார், ஆயுதப்படை டி.எஸ்.பி., ராமசாமி உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X