சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்ணை தாக்கியவர் கைது

Added : மே 23, 2020
Share
Advertisement

திருக்கோவிலுார்; அரகண்டநல்லுார் அருகே முன்விரோதம் காரணமாக பெண்ணைத் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.அரகண்டநல்லுார் அடுத்த வீரப்பாண்டி, அருந்ததியர் தெருவைச் சேர்ந்தவர் சந்துரு மனைவி ஆஷா, 24; இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சேட்டு மகன் மணிகண்டன், 29; என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில் ஆஷா தனது தந்தையுடன் கடந்த 17ம் தேதி மாலை 3:00 மணியளவில் வேட்டவலம் சென்று ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வீரப்பாண்டி திருநாராயணன் கோவில் அருகே வரும்போது மணிகண்டன் வழிமறித்து ஆஷா அவரது தந்தை இருவரையும் தாக்கினார்.இதுகுறித்து ஆஷா கொடுத்த புகாரின் பேரில் அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து மணிகண்டனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X