கண்டிப்பு தேவை! | Dinamalar

கண்டிப்பு தேவை!

Added : மே 23, 2020 | கருத்துகள் (2)
Share
 கண்டிப்பு தேவை!


மக்களின் வாங்கும் சக்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி வெகுவாக குறையும் என, ரிசர்வ் வங்கி கவர்னர், சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். அப்படியானால், பணப்புழக்கத்தை அதிகரிக்கும் அறிவிப்பை ஏன் வெளியிட வேண்டும். நிதி நடவடிக்கைகளை மேம்படுத்துவது உங்கள் கடமை என, மத்திய அரசிடம் கண்டிப்புடன் கூற வேண்டியது தானே.
--சிதம்பரம் , முன்னாள் மத்திய அமைச்சர், காங்.,
பொறுப்பில்லாத செயல்!
தப்லிகி ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான், 'கொரோனா' வைரஸ் பரவலுக்கு முக்கிய காரணம். அரசுக்கு ஒத்துழைக்காமல், பதுங்கியிருந்து, வைரசை தீவிரமடையச் செய்து, மற்றவர்களிடம் பரவுவதற்கு காரணமாக விளங்கினர். இந்த அமைப்பினர் பொறுப்பில்லாமல் செயல்பட்டதே, பாதிப்புக்கு முக்கிய காரணம்.
- சிவராஜ் சிங் சவுகான் , மத்திய பிரதேச முதல்வர், பா.ஜ.,
பெரும் வரவேற்பு!
'ஹூனார் ஹாத்' எனப்படும், கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனைக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனால், கிராமங்களைச் சேர்ந்த, கைவினை கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. ஊரடங்குக்கு பின், வரும், செப்.,பில், மீண்டும் கண்காட்சி நடத்த திட்டமிட்டுள்ளோம்.
- முக்தார் அப்பாஸ் நக்வி , மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர், பா.ஜ.,

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X