பயணிகள் நிழற்குடை சேதம் பொதுமக்கள் கடும் அவதி

Added : மே 23, 2020
Share
Advertisement

உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அருகே சேந்தமங்கலம் கிராமத்தில் உள்ள பயணிகளுக்கான நிழற்குடை முற்றிலும் சேதமாகியுள்ளதால் பொதுமக்கள் பஸ்சுக்காக வெயிலில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.உளுந்துார்பேட்டை அடுத்த சேந்தமங்கலம் கிராமத்தைச் சுற்றிலும் கிருஷ்ணரெட்டிகுப்பம், களத்துார், மயிலங்குப்பம் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள பொதுமக்கள் தங்களின் சொந்த பணியின் காரணமாக, உளுந்துார்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் நோக்கிச் செல்வதற்கு சேந்தமங்கலம் பயணிகள் நிழற்குடைக்கு வந்து காத்திருந்து பஸ் ஏறிச் செல்வது வழக்கம்.கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சேந்தமங்கலம் பயணிகளுக்கான நிழற்குடை தற்போது முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. இங்கு பயணிகள் அமரும் இருக்கைகள் உடைக்கப்பட்டுள்ளது.இதனால், பயணிகள் வெயிலில் சாலையில் நின்றிருந்து பஸ் ஏறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இங்குள்ள பயணிகளின் நிலையை அறிந்து, அதிகாரிகள் புதிய நிழற்குடையை கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X