அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு

Added : மே 23, 2020
Share
விக்கிரவாண்டி: விழுப்புரம் அருகே தின்பண்டம் வாங்கி சாப்பிட்டு மயக்கமடைந்து அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குழந்தைகளை கலெக்டர் பார்வையிட்டு சிறப்பான சிகிச்சையளிக்க உத்தரவிட்டார்.விழுப்புரம் அடுத்த பொய்கை அரசூர் கிராமத்தில் நேற்று முன்தினம் தெருக்களில் விற்ற பேக்கரி தின்பண்டங்களை வாங்கி சாப்பிட்ட மைக்கேல் மகன்கள் இனியவன், 4; மதிராஜ்,3;

விக்கிரவாண்டி: விழுப்புரம் அருகே தின்பண்டம் வாங்கி சாப்பிட்டு மயக்கமடைந்து அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குழந்தைகளை கலெக்டர் பார்வையிட்டு சிறப்பான சிகிச்சையளிக்க உத்தரவிட்டார்.விழுப்புரம் அடுத்த பொய்கை அரசூர் கிராமத்தில் நேற்று முன்தினம் தெருக்களில் விற்ற பேக்கரி தின்பண்டங்களை வாங்கி சாப்பிட்ட மைக்கேல் மகன்கள் இனியவன், 4; மதிராஜ்,3; :முகுந்தன், 2; பாபு மகன் ஜீவா, 6; மூர்த்தி மகன்கள் தர்ஷன், 2; சாமுவேல், 3; உட்பட 15 குழந்தைகள் வாங்கி சாப்பிட்டுள்ளனர்.சாப்பிட்ட அனைவருக்கும் வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடல்நிலை மிக மோசமானதால் நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.தகவலறிந்த கலெக்டர் அண்ணாதுரை நேற்று காலை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறும் குழந்தைகளின் பெற்றோர்களிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார். பின்னர், கல்லுாரி டீன் குந்தவி தேவியிடம், குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து சிறப்பு சிகிச்சைகளையும் மேற்கொள்ள உத்தரவிட்டார்.எஸ்.பி.,ஜெயக்குமார், திட்ட இயக்குனர் மகேந்திரன், ஆர்.டி.ஓ., ராஜேந்திரன், கல்லுாரி துணை முதல்வர் அனிதா, மருத்துவ கண்காணிப்பாளர் சுப்ரமணியன், ஆர் .எம்.ஓ., சாந்தி, நிர்வாக அதிகாரி சிங்காரம், தாசில்தார்கள் வேல்முருகன், பார்த்திபன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X