பொது செய்தி

இந்தியா

'பருத்தி வீரன்' முத்தழகு தான் என் அடையாளம்!

Added : மே 23, 2020
Share
Advertisement
 'பருத்தி வீரன்' முத்தழகு தான் என் அடையாளம்!

தேசிய விருது பெற்றும், தமிழில் நல்ல படங்கள் வாய்க்காதது குறித்து, பிரபல நடிகை பிரியா மணி: பிறந்து வளர்ந்தது, பெங்களூரு. ஸ்கூல் படிக்கும் போதே, 'மாடலிங்' வாய்ப்பு வந்தது. சினிமாவில் நுழைந்தது, நானே எதிர்பார்க்காதது. கண்களால் கைது செய் படத்துடைய கதைஆசிரியர் பிரேம், என்னை ஒரு விளம்பரத்துக்காக, 'கமிட்' பண்ணியிருந்தார். அந்தச் சமயத்துல, என் போட்டோவை பார்த்து, இயக்குனர் பாரதிராஜா, கண்களால் கைது செய் படத்தில் நடிக்க வைத்தார்.

அந்தப் படத்துல நடிக்கும்போது, நான் ஸ்கூல் படிச்சிட்டு இருந்தேன். ரொம்ப வெகுளி; விஷயம் தெரியாது. ஆனா, பொறுமையாக எனக்கும், அந்தப் படத்தில் நடித்த மற்ற நடிகர்களுக்கும், பாரதிராஜா நடிப்பு சொல்லிக் கொடுத்தார். ரெண்டாவது படமே, பாலு மகேந்திரா சார் டைரக்ஷன்ல, நடிகர் தனுஷுடன், அது ஒரு கனாக்காலம் படத்துல நடிக்கிறதுக்கு வாய்ப்பு வந்தது.இந்தப் படமும், எதிர்பார்த்த அளவு சரியா போகலை. எனினும், நிறைய பேர் என்னை கவனிக்க ஆரம்பிச்சாங்க; நல்ல விமர்சனம் வந்தது. அது ஒரு கனாக்காலம் முடிச்சதும், இயக்குனர் அமீர் ஆபீசில் இருந்து, எனக்கு போன் வந்துச்சு.

போனேன். கதை எதுவும் கேட்கவேயில்லை. அமீர் மேல இருந்த நம்பிக்கையில், பருத்தி வீரன் படத்தில் நடிக்க ஒப்புக்கிட்டேன். தேனி, மதுரை, சிவகங்கைன்னு கதைக்களம், நடிப்புன்னு எல்லாமே என் முந்தைய படங்களை விட வித்தியாசமாகவும், சவாலாவும் இருந்தது. 100 நாட்களுக்கு மேல ஷூட்டிங் நடந்தது.ஷூட்டிங் போயிட்டிருந்தபோதே, படத்துக்கான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் கிட்ட நிறைய இருந்தது. அதுக்கேத்த மாதிரி, படம் வெளியானதுக்குப் பிறகு, படக்குழுவில் எல்லாருக்குமே அந்தப் படம், ஒரு அடையாளமா மாறிப்போச்சு. இத்தனை வருஷங்கள் கழிச்சும், பருத்தி வீரன் முத்தழகு கதாபாத்திரம் தான், எனக்கு பெயர் சொல்லக் கூடியதாக இருக்குது.
இந்தப் படத்துல என் நடிப்புக்காக தேசிய விருது கிடைத்தது.அந்தப் படத்துக்குப் பிறகு, முத்தழகு மாதிரியே நிறைய கதாபாத்திரங்கள் வந்துச்சு. ஆனா, எனக்கு அந்த வட்டத்துக்குள் சிக்க விருப்பமில்லை. அதனால், முத்தழகை அந்தப் படத்தோட விட்டுட்டு, அடுத்து சில கமர்ஷியல் படங்கள், தமிழில் பண்ணினேன். ஆனா, அந்தப் படங்கள் எதுவும், பெரிய அளவில், 'ஹிட்' ஆகலை. நடிப்புக்கு தேசிய விருது வாங்கியும் எனக்கான இடம், தமிழ் சினிமால கிடைக்கலைங்கற வருத்தம், எனக்கு இப்பவும் இருக்குது. இப்போது, தெலுங்குல, நடிகர் வெங்கடேஷ் கூட, நாரப்பா படம், ஹிந்தியில் அஜய்தேவ்கன் கூட, மைதான் படங்களில் நடிச்சிட்டு இருக்கேன்!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X