பொது செய்தி

தமிழ்நாடு

சங்கராபுரத்தில் செங்கல் சூளை பணி தீவிரம்

Added : மே 23, 2020
Share
Advertisement

சங்கராபுரம்; சங்கராபுரம் நகரில் செங்கல் தயாரிப்பு பணியில் பலர் தீவிரம் காட்டி வருகின்றனர்.தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 2 மாதங்களாக கட்டுமான தொழில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கடந்த வாரம் ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு, கட்டுமான தொழில்கள் தொடங்க முதல்வர் உத்தரவிட்டார். இதையொட்டி பல்வேறு கிராமங்களில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, கட்டுமானப் பணிக்கு முக்கிய தேவையான செங்கல் தயாரிக்கும் பணி ஜரூராக நடைபெற்று வருகிறது. சங்கராபுரம் - தியாகராஜபுரம் சாலையில் பலர் செங்கல் சூளை வைத்து செங்கல் தயாரிக்கும் பணியில் ஈடு பட்டுள்ளனர். ஒரு செங்கல் 5 ருபாய்க்கு விற்கப்படுகிறது.சங்கராபுரம் பகுதியில் தயாரிக்கப்படும் செங்கல்லை வெளியூர் மக்கள் வந்து வாங்கி செல்வதால் செங்கல்லுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் சங்கராபுரம் நகரில் செங்கல் சூளை பணி ஜரூராக நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X