தயாரிப்பாளர் சங்க தேர்தல் உறுப்பினர்களுக்கு கெடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தயாரிப்பாளர் சங்க தேர்தல் உறுப்பினர்களுக்கு கெடு

Added : மே 23, 2020
Share

சென்னை : 'தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து, சந்தா செலுத்தவும், வாக்காளர் பட்டியலில் உள்ள குறைகளை தெரிவிக்கவும், ஜூன், 15 கடைசி நாள்' என, தயாரிப்பாளர் சங்க தனி அலுவலர்கள் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தனி அலுவலர் மற்றும் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரியின் அறிக்கை:தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின், 2020 --22ம் ஆண்டு, நிர்வாகிகள்தேர்தலுக்கான அட்டவணை, ஏப்., 17ல் வெளியிடப்பட்டது. கொரோனா ஊரடங்கால், ஏற்கனவே அறிவித்த தேர்தல் அட்டவணைப்படி, தேர்தல் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.மூன்று மாத அவகாசம்கேட்டதால், செப்., 30க்குள் தேர்தல் நடத்த, நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏற்கனவே அறிவித்த, தேர்தல் அட்ட வணை ரத்து செய்யப்படுகிறது. புதிய தேர்தல் அட்டவணை உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்படும்.

ஊரடங்கால், தயாரிப்பாளர்கள் வெளியே செல்ல முடியாத நிலையில் உள்ளனர். இதனால், தங்களால் ஆண்டு சந்தாவை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என, தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.ஆனால், தேர்தலை நடத்த ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளதால், ஜூன், 15ம் தேதிக்குள், சந்தா தொகையை செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. வாக்காளர் பட்டியல் தொடர்பான குறைகளை சமர்பிக்க, ஜூன், 15 வரை அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, tfpcouncil@yahoo.co.in என்ற மின்னஞ்சலில் புகார்களை தெரிவிக்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X