பொது செய்தி

தமிழ்நாடு

ஒரு பயணியுடன் இயங்கிய ஆட்டோக்கள்

Added : மே 23, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் பல்வேறு கட்டுப்பாட்டுகளுடன் இரண்டு மாதங்களுக்கு பிறகு ஆட்டோக்கள் நேற்று முதல் இயங்கத் தொடங்கின.கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நோயின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருந்ததால் நான்காவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, தற்போது வரை அமலில் உள்ளது.இதனால் கடைகள், ஒரு சில அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன. பஸ், ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து முடங்கியது. தற்போது தமிழகத்தில் ஊரடங்கில் இருந்து படிப்படியாக தளர்வு அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 10ம் தேதி முதல் 34 வகையான கடைகளுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.இந்நிலையில் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் சில நிபந்தனைகளுடன் ஆட்டோக்கள் இயங்க தமிழக அரசு அறிவித்தது. அதையொட்டி 59 நாட்களுக்கு பிறகு, கள்ளக்குறிச்சியில் உள்ள 20க்கும் மேற்பட்ட ஆட்டோ ஸ்டாண்டுகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்க தொடங்கின.ஆட்டோ டிரைவர் முக கவசம் அணிந்தும், பயணிகளின் பயன்பாட்டிற்காக சானிடைசரும் வைத்திருந்தனர். அரசு அறிவித்துள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு முக கவசம் அணிந்த ஒரே ஒரு பயணியை மட்டுமே ஆட்டோக்களில் ஏற்றி சென்றனர். ேஷர் ஆட்டோ பயன்பாடு நேற்று கள்ளக்குறிச்சியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X