வைரஸ் பாதிப்பில் ரஷ்யாவை முந்தியது பிரேசில்

Added : மே 23, 2020
Share
Advertisement

ரியோ டி ஜெனிரோ : கொரோனா வைரஸ் பாதிப்பில், சர்வதேச அளவில் ரஷ்யாவை முந்தி, பிரேசில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

பிரேசிலில், 3.30 லட்சம் பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு, சர்வதேச அளவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, வைரஸ் பாதிப்பில், 16 லட்சம் பேருடன், அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. ரஷ்யா, 2.26 லட்சம் பாதிப்புடன் இரண்டாவது இடத்தில் இருந்தது. குற்றச்சாட்டுஇந்நிலையில், உலக சுகாதார நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிவிப்பின்படி, தென் அமெரிக்க நாடான பிரேசில், ரஷ்யாவை முந்தி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. பிரேசிலில் நேற்று வரை, 3.30 லட்சம் பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

21 ஆயிரம் பேர், கொரோனாவுக்கு பலியாகி விட்டனர். கடந்த ஒரு மணி நேரத்தில் மட்டும், பிரேசிலில், 1,000 பேர் பலியாகியுள்ளனர்.பிரேசில் அரசு, கொரோனா வைரசின் தீவிரத்தை உணராமல், கட்டுப்பாடுகளை தளர்த்தியதும், போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாததும் தான், பாதிப்பு அதிகரித்ததற்கு காரணம் என, பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். கடந்த மாதம் வரை, ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.

தற்போது தென் அமெரிக்க நாடுகள், கொரோனா பாதிப்பு மையமாக மாறியுள்ளன. பிரேசில் மற்றும் மெக்சிகோ நாடுகளில் அதிக அளவில் வைரஸ் பரவி வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, பிரேசிலின் முக்கிய நகரமான ரியோ டி ஜெனிரோவில், அடுத்த சில நாட்களில், அனைத்து கடைகளையும் திறக்கப் போவதாக, அந்நகர மேயர் அறிவித்து உள்ளார். வீடியோ சர்ச்சைபிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சொனாரோவின் மகன் மற்றும் அவரது குடும்பத்தினர் முறைகேடு வழக்குகளில் சிக்கி உள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில், போலீஸ் விசாரணையில் அதிபர் தலையீடு இருப்பதாக கூறி, பிரேசில் சட்டத்துறை அமைச்சர் மோரோ, சமீபத்தில் தன் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கிடையே, அதிபர் போல்சொனாரோ, அமைச்சரவை கூட்டத்தில் பேசிய, 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் அவர், 'போலீசார், எனக்கு முறையான தகவல்களை தருவது இல்லை. என் குடும்பத்தினரை பாதுகாப்பதற்காக, தேவைப்பட்டால் அமைச்சரவையை மாற்றி அமைப்பேன்' என, கூறியதுடன், ஆபாச வார்த்தைகளாலும் கடுமையாக திட்டியுள்ளார்.

இந்த வீடியோ வெளியாகி உள்ளதை அடுத்து, பிரேசிலில் அதிபரின் செல்வாக்கு வேகமாக சரியத் துவங்கியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X