பொது செய்தி

தமிழ்நாடு

மின் வாரிய பணியாளர்களுக்கு மூன்று நாட்களுக்கு விடுமுறை

Added : மே 23, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி: தமிழகத்தில் பல நாட்கள் மூடப்பட்டிருந்த அரசுத்துறை அலுவலகங்கள் இயங்க வேண்டும் என்று அரசு அறிவித்த நிலையில், மின் வாரிய அலுவலகத்திற்கு தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.தமிழகத்தில் கொரோனா தடுப்பு ஊரடங்கு காரணமாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் கடந்த 2 மாதங்களாக திறக்கப்படாமல் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் அரசு சார்பில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு குறைந்த பணியாளர்களுடன் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இயங்க துவங்கின.நீண்ட இடைவெளிக்குப்பின் இயங்கத்துவங்கிய அனைத்து அரசு துறைகள் அலுவலகங்களும் நேற்று சனிக்கிழமை விடுமுறை இல்லாமல் பணி செய்ய வேண்டும் அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இதனால் பத்திரப்பதிவு உள்ளிட்ட பெருவாரியான அரசுத்துறை அலுவலகங்களும் நேற்று இயங்கின.ஆனால் கள்ளக்குறிச்சி பகுதியில் மின் வாரிய அலுவலகம் மட்டும் விடுமுறை அறிவிப்புடன் நேற்று பூட்டிக் கிடந்தது. அரசு அறிவிப்பின்படி அரசு அலுவலகங்கள் நேற்று இயங்கும் என்ற நம்பிக்கையில் ஏராளமான பொதுமக்கள் மின் கட்டணம்செலுத்துவதற்காக அலுவலகத்திற்கு வந்தனர்.ஆனால் விடுமுறை அறிவிப்புடன் மின் வாரிய அலுவலகம் பூட்டிக்கிடந்ததால் அதிருப்தியுடன் திரும்பிச் சென்றனர்.இதுகுறித்து மின்வாரிய அலுவலரிடம் கேட்டபோது, தமிழக அரசின் அரசாணை எதுவும் எங்களுக்கு வழங்கப்படவில்லை. அதனால் விடுமுறை எடுத்துள்ளோம் என தெரிவித்தார்.இதனால் மின் வாரிய பணியாளர்களுக்கு மட்டும் சனி, ஞாயிறு மற்றும் ரம்ஜான் விடுமுறை என திங்கட்கிழமை வரை மூன்று நாட்களுக்கு தொடர் விடுமுறை கிடைத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X