பொது செய்தி

தமிழ்நாடு

வழக்கம் போல் செயல்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்கள்

Added : மே 23, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி; வாரத்தில் 6 நாட்கள் அரசு அலுவலகம் செயல்படும் என அறிவிக்கபட்டதையொட்டி, கள்ளக்குறிச்சியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்கள் நேற்று செயல்பட்டன.கொரோனா தொற்றினையொட்டி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் சில அரசு அலுவலகங்களும், கடைகளும் மூடப்பட்டன. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 20ம் தேதி பத்திர பதிவு துறைக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.தற்போது போக்குவரத்து துறை தவிர்த்து, மற்ற துறை அலுவலகங்கள் கடந்த சில தினங்களாக செயல்பட துவங்கியுள்ளன. ஊரடங்கால் முடங்கிய அரசு பணிகளை வேகமாக முடிக்க வாரத்தில் 6 நாட்கள் அரசு அலுவலகங்கள் இயங்கும் என தமிழக அரசு அறிவித்தது.மேலும், சில அரசு அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடனும், ஒரு சில அரசு அலுவலகங்கள் மட்டும் 100 சதவீத பணியாளர்களுடனும் இயங்கும் என அறிவிக்கப்பட்டது.அதையொட்டி, சனிக்கிழமையான நேற்று கள்ளக்குறிச்சியில் உள்ள இரண்டு சார்பதிவாளர் அலுவலகங்களும் செயல்பட்டன. இங்கு பணிபுரியும் 7 ஊழியர்களும் நேற்று பணிக்கு வந்தனர். ஆனால், நேற்று பாட்டிமை என்பதால் ஒரு பத்திரங்கள் கூட பதிவாகவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X