சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரை ரவுண்ட் அப்: அரசு பெண் டாக்டருக்கு கொரோனா

Updated : மே 23, 2020 | Added : மே 23, 2020
Share
Advertisement

மதுரை:மதுரையில் அரசு பெண் டாக்டர் உட்பட இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.



latest tamil news



மொத்த பாதிப்பு 226 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 113 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.பாதிக்கப்பட்ட பெண் டாக்டருக்கு 39 வயதாகிறது. மதுரை தபால்தந்தி நகரை சேர்ந்த இவர் கொரோனா வார்டில் பணிபுரிந்து வந்தார். வழக்கமான பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பெறும் நோயாளிகள் மூலம் இவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.


latest tamil news



பாதிக்கப்பட்ட இன்னொருவர் தனிமைப்படுத்துதல் முகாமில் இருந்த 38 வயது ஆண். உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த இவர், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்.
மாவட்டத்தில் இதுவரை 224 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மொத்தம் 113 பேர் பாதிப்பில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இருவர் இறந்து விட்டனர். 111 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X