பாக்., விமான விபத்தில் பலி 97 ஆனது

Added : மே 23, 2020
Share
Advertisement

கராச்சி : பாகிஸ்தானின் கராச்சியில், சர்வதேச விமான நிலையம் அருகே, வீடுகள் மீது விமானம் விழுந்து நொறுங்கியதில், பலியானோர் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது. இருவர் அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டனர். அண்டை நாடான பாகிஸ்தானில், லாகூரில் இருந்து, 91 பயணியர் மற்றும் எட்டு பணியாளர்களுடன், 'ஏர்பஸ் ஏ 320' விமானம், நேற்று முன்தினம் கராச்சி புறப்பட்டது. அங்குள்ள, ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் முன், செயலிழந்த விமானம், குடியிருப்புகள் மீது விழுந்தது. நேற்று முன் தினம் துவங்கிய மீட்புப் பணியில், 97பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர். இது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது: விபத்தில், விமானத்தில் இருந்த, 91 பயணியர் உள்ளிட்ட, 97 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் வங்கியின் தலைவர், ஜாபர் மசூத் உள்ளிட்ட இருவர், அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் தப்பியுள்ளனர். விபத்தில் பலியான, 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்; மற்றவர்களை கண்டறியும் பணி தொடர்கிறது. அடையாளம் காண முடியாத வகையில் சிதைந்து போன உடல்களில், டி.என்.ஏ., எடுக்கப்பட்டு, அடையாளம் காணும் முயற்சியும் நடந்து வருகிறது. விமானம் கீழே விழும் முன், அதன் இறக்கைகள் வீடுகளை சேதப்படுத்தியது.

விமானமும் விழுந்தததால், அப்பகுதியில், 25 வீடுகள் பலத்த சேதம் அடைந்துள்ளன. இதில் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.விபத்து நடந்த நேரத்தில், பெண்கள் பலரும், வீடுகளில் ரம்ஜான் தொழுகையில் இருந்துள்ளனர். இவ்விபத்தில், 30க்கு மேற்பட்ட பெண்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான உண்மையான காரணம், இதுவரை கண்டறியப்படவில்லை; இதற்காக நால்வர் குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடைபெறுகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X