பொது செய்தி

தமிழ்நாடு

வெளி மாநிலத்தில் இருந்து திரும்பியோருக்கு வரவேற்பு

Added : மே 23, 2020
Share
Advertisement

உளுந்துார்பேட்டை; வெளிமாநிலத்தில் இருந்து சொந்த ஊர் திரும்பியோருக்கு, உளுந்துார்பேட்டை அருகே சேந்தமங்கலம் பள்ளியில் எம்.பி., பழச்சாறு அளித்து வரவேற்றார்.ஊரடங்கு உத்தரவால் குஜராத் மாநிலத்தில் வேலையின்றி, உணவின்றியும் தவித்த கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதிக்குட்பட்ட ரிஷிவந்தியம் ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு மீண்டும் திரும்பினர். இவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப கவுதமசிகாமணி எம்.பி., அங்குள்ள தமிழ்ச்சங்கம் மூலம் ஏற்பாடு செய்திருந்தார்.சொந்த ஊருக்கு திரும்பிய அவர்களை உளுந்துார்பேட்டை அடுத்த சேந்தமங்கலம் எஸ்.எஸ்.வி., பள்ளியில், தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை கவுதமசிகாமணி எம்.பி., நேரில் சந்தித்து, பழச்சாறு கொடுத்து வரவேற்றார். மேலும், அவர்களுக்கு முறையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டது. உதயசூரியன் எம்.எல்.ஏ., தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் அங்கையற்கண்ணி, உட்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X