உலக வங்கியின் சிறப்பு அதிகாரியாக அப்பாஸ் ஜா, நியமனம்

Added : மே 23, 2020
Share
Advertisement
 உலக வங்கியின் சிறப்பு அதிகாரியாக  அப்பாஸ் ஜா, நியமனம்

வாஷிங்டன் : பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மைக்கான உலக வங்கியின் சிறப்பு அதிகாரியாக, இந்திய பொருளாதார நிபுணர் அப்பாஸ் ஜா, நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா மற்றும் வங்கதேசத்தில், 'அம்பான்' புயல், பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தெற்காசியாவின் பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மைக்கான பயிற்சி மேலாளரை, உலக வங்கி நேற்று நியமனம் செய்துள்ளது. இந்திய பொருளாதார வல்லுனரான அப்பாஸ் ஜா, இப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு, இப்பிராந்தியத்தின் பேரிடர் மேலாண்மை மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான குழுக்களை ஒன்றிணைத்து, உதவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் பிரச்னைகளுக்கு, சிறந்த தீர்வுகளை வழங்க, தகுதி வாய்ந்த நிபுணர்கள் அடங்கிய குழுவை கட்டமைப்பது, வழிநடத்துவது மற்றும் ஊக்குவிப்பது ஆகிய பணிகளில், இவர் ஈடுபடஉள்ளார். கடந்த, 2001ம் ஆண்டு, உலக வங்கியில் இணைந்த அப்பாஸ் ஜா, வங்கதேசம், பூட்டான், இந்தியா, இலங்கை நாடுகளில், வங்கியின் நிர்வாக இயக்குனராக பணிபுரிந்துள்ளார். மேலும், லத்தீன் அமெரிக்கா, கரீபியன், ஐரோப்பிய, மத்திய ஆசிய நாடுகளிலும் அவர் பணியாற்றியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X