சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டெப்போ முன் ஆர்ப்பாட்டம்

Added : மே 23, 2020
Share
Advertisement

சின்னசேலம்; அனுமதியின்றி சின்னசேலம் அரச போக்குவரத்துக் கழக பணிமனை முன் ஆர்ப்பாட்டம் நடத்திய 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.கொரோனா தொற்றினால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை ஈடு செய்ய மத்திய அரசு பல்வேறு புதிய திட்டங்களையும், மாற்றத்தையும் தெரிவித்துள்ளது. இதில், அரசு ஊழியர்கள் பணிபுரியும் நேரம், 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பை கண்டித்தும், மீண்டும் 8 மணி நேரமாக அமல்படுத்தக் கோரியும் சின்னசேலம் பஸ் டெப்போ முன் தொ.மு.ச., சார்பில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. சின்னசேலம் வட்ட தொ.மு.ச., தலைவர் திராவிட மணி தலைமையில் 5 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த சின்னசேலம் சப் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய திராவிட மணி உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X