அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜி.எஸ்.டி.,க்கு அவகாசம் அவசர சட்டம் பிறப்பிப்பு

Added : மே 23, 2020
Share
Advertisement

சென்னை : ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் செய்வதற்கு அவகாசம் அளிக்க, அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக, பொது மக்கள் மட்டுமின்றி, வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள், ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி கணக்கை சமர்ப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் செய்ய, அவகாசம் அளித்து, மத்திய அரசு உத்தரவிட்டுஉள்ளது. அதை பின்பற்றி, தமிழகத்தில், ஜி.எஸ்.டி., கணக்கு சமர்பிப்பது, கூடுதல் வரியை திரும்ப பெற கோருவது, மேல்முறையீடு செய்வது போன்றவற்றுக்கு, அவகாசம் அளிப்பதற்காக, சட்ட திருத்தம் கொண்டு வர, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், நேற்று முன்தினம், அவசர சட்டம் பிறப்பித்துள்ளார்.

அதேபோல, தமிழகத்தில் உள்ள, மதிப்பு கூட்டு வரி சட்டம், பந்தய வரி சட்டம், கேளிக்கை வரி சட்டம், ஆடம்பர வரி சட்டம் போன்வற்றிலும், திருத்தம் கொண்டு வர, அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த சட்டத்தின்படி, 'நோட்டீஸ்' அளித்தல், அறிவிக்கை செய்தல், நடவடிக்கைகளை முடித்தல், மேல் முறையீடு செய்தல் போன்றவற்றுக்கு, அவகாசம் அளிக்க, தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X