சீன எல்லையில் பதற்றம் எதிரொலி இந்திய ராணுவ தளபதி திடீர் ஆய்வு

Added : மே 23, 2020
Share
Advertisement

புதுடில்லி : சீன எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்திய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே, காஷ்மீரின் லே பகுதியில், ராணுவ உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மற்றும் ஆய்வு நடத்தினார்.

சமீபகாலமாக, இந்திய - சீன எல்லையில், பதற்றம் நிலவுகிறது. வட கிழக்கு மாநிலமான சிக்கிமின் எல்லைப் பகுதியில், சீன வீரர்கள் சிலர், அத்துமீறி நுழைந்தனர். இதற்கு நம் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. ராணுவ உயர் அதிகாரி கள் தலையிட்டதை அடுத்து, பிரச்னைக்கு சுமுக தீர்வு ஏற்பட்டது. அடுத்த சில நாட்களில், சீன ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர், இந்திய எல்லைப் பகுதி அருகே ஊடுருவியதை அடுத்து, மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கு பதிலடியாக இந்திய விமானப் படை ஹெலிகாப்டர், அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டது. இந்த பதற்றமான சூழலை அடுத்து, இரு நாட்டு வீரர்களும், எல்லையில் குவிக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில், இந்திய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே, சீன எல்லை பகுதியான, காஷ்மீரில் உள்ள லே பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினார். ராணுவத்தின் வடக்கு பிராந்திய கமாண்டர் ஒய்.கே.ஜோஷி உள்ளிட்ட ராணுவ உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ராணுவ தளபதியின் இந்த திடீர் ஆய்வால், எல்லை பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X