பொது செய்தி

தமிழ்நாடு

விழுப்புரம் நகர ஆர்.எஸ்.எஸ்.,சார்பில் மருந்து வழங்கல்

Added : மே 23, 2020
Share
Advertisement

விழுப்புரம்: விழுப்புரத்தில், ஆர்.எஸ்.எஸ்., மற்றும் சமர்ப்பணம் சேவை மையம் சார்பில், ேஹாமியோபதி மருந்து வழங்கினர்.விழுப்புரம் வி.ஆர்.பி.,மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, வி.ஏ.ஓ., சங்க நிறுவன தலைவர் துரை ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். ஆர்.எஸ்.எஸ்., மாநில செயலாளர் ராஜசேகரன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ேஹாமியோபதி மருந்துகளை, வி.ஏ.ஓ.,க்களுக்கு வழங்கினார்.டாக்டர் மரியதெரேசா, விழுப்புரம் சமர்ப்பணம் சேவை மைய ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் நந்தகுமார், நகர செயலாளர் முரளிதரன் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில், வைரஸ் தொற்று தடுப்பிற்கான மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ், தமிழ்நாடு அரசு ஆரோக்கியம் திட்டத்தின் கீழ், ஆர்சனிக்கம் ஆல்பம் என்கிற ேஹாமியோபதி மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் பாரிவள்ளல் மற்றும் நிர்வாகிகள் உட்பட வி.ஏ.ஓ.,க்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X