காங்., ஆவண படத்தில் தொழிலாளர்களுடன் ராகுல்

Added : மே 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி : கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுடன், ராகுல் பேசும் காட்சிகள் கொண்ட ஆவணப்படத்தை, காங்., நேற்று வெளியிட்டுள்ளது. கொரோனா பரவலைஅடுத்து கொண்டு வரப்பட்ட ஊரடங்கினால், வேலையிழந்து தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள், நுாற்றுக்கணக்கான கி.மீ., துாரத்தில் உள்ள சொந்த ஊர்களுக்கு நடந்து செல்கின்றனர். வாழ்வாதாரம்இதுதொடர்பான, 16 நிமிட ஆவண படத்தை, காங்.,

புதுடில்லி : கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுடன், ராகுல் பேசும் காட்சிகள் கொண்ட ஆவணப்படத்தை, காங்., நேற்று வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவலைஅடுத்து கொண்டு வரப்பட்ட ஊரடங்கினால், வேலையிழந்து தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள், நுாற்றுக்கணக்கான கி.மீ., துாரத்தில் உள்ள சொந்த ஊர்களுக்கு நடந்து செல்கின்றனர். வாழ்வாதாரம்இதுதொடர்பான, 16 நிமிட ஆவண படத்தை, காங்., நேற்று வெளியிட்டுள்ளது. ஊரடங்கின் காரணமாக, நகரங்களில் வாழ்வாதாரம் இழந்து, தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப வழியின்றி, புலம் பெயர் தொழிலாளர்கள் குழந்தைகளுடன் தவித்ததை, இந்த ஆவண படம் விளக்குகிறது.

கடந்த வாரம், டில்லியில், சுக்தேவ் விஹார் மேம்பாலம் அருகே, சொந்த ஊருக்கு நடந்து சென்ற, பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட, 20 புலம்பெயர் தொழிலாளர்களுடன் ராகுல் பேசுகிறார்.வேலை, வருமானம் இழப்பு ஆகிய பிரச்னைகள் குறித்து, ராகுல் அவர்களிடம் கேட்டறிகிறார். பின், காங்., கட்சியினர் ஏற்பாடு செய்த வாகனங்களில், தங்கள் வீடுகளுக்கு செல்லும் அவர்கள், ராகுலுக்கு நன்றி கூறுகின்றனர்.

இதில் தோன்றும் ராகுல் பேசுவதாவது:கொரோனா வைரஸ் ஏராளமானோரை பாதித்துள்ள நிலையில், புலம் பெயர் தொழிலாளர்களை அதிகம் காயப்படுத்தியுள்ளது. நாட்டின் முழு சுமையையும், உங்கள் தோள்களில் சுமக்கிறீர்கள்.நாட்டின் பலம்ஊரடங்கால் தவிக்கும், 13 கோடி ஏழை குடும்பங்களுக்கு, அரசு நேரடியாக, 7,500 ரூபாய் கொடுக்க வேண்டும்.இவ்வாறு அதில், ராகுல் பேசுகிறார்.ஆவண படத்தின் முடிவில், 'புலம் பெயர்ந்த தொழிலாளர்களான சகோதர, சகோதரிகளே... நீங்கள் இந்த நாட்டின் பலம்' என, ராகுலின் குரல் ஒலிக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VTR - Chennai,இந்தியா
24-மே-202012:12:05 IST Report Abuse
VTR Best wishes Mr. Rahul. BUT We get, what we deserve and hence, we only deserve what we get. என்னதான் எண்ணெயை தேசிக்குட்டு உருண்டாலும் ஒற்ற மண்ணுதான் ஓட்டும் Effort and heartfelt objectives determine the outcome. So, you know congress destiny, so long Gandhi family is at the party helm
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X