அ.தி.மு.க., சார்பில் 1000 பேருக்கு நிவாரணப் பொருட்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., சார்பில் 1000 பேருக்கு நிவாரணப் பொருட்கள்

Added : மே 23, 2020
Share

செஞ்சி; மேல்மலையனுார் தெற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த 1000 பேருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.மேல்மலையனுார் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் முன்னாள் எம்.பி., ஏழுமலை ஏற்பாட்டின் பேரில், மேலச்சேரி, செவலபுரை, வடபாலை, தென்பாலை, மேல்அருங்குணம், கலத்தம்பட்டு கிராமங்களில் துாய்மைப் பணியாளர்கள், பழங்குடியினர், முடி திருத்துவோர், சலவைத் தொழிலாளர், மண்பாண்ட தொழிலாளர்கள், ஆதரவற்ற முதியோர்கள், சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய அனைத்து பணியாளர்கள் என 1000 பேருக்கு அரிசி, காய்கறி, துண்டு உள்ளிட்டநிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.அமைச்சர் சண்முகம் தலைமை தாங்கி நிவாரண பொருட்கள் வழங்குவதை துவக்கி வைத்தார். செஞ்சி ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி, பார் கவுன்சில் உறுப்பினர் வழக்கறிஞர் கதிரவன், இளைஞர் பாசறை மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் அருண்தத்தன், விவசாய அணி மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், எம்.ஜி.ஆர்., மன்ற ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட துணைச் செயலாளர் பூங்காவனம், ஒன்றிய துணைச் செயலாளர்கள் தனம் சேகர், சந்திரன், ஒன்றிய இணைச் செயலாளர் சசிகலா ஜெய்சங்கர், கிளைச் செயலாளர்கள் தேவனுார் மணி, வடபாலை பாண்டியன், ராஜேந்திரன், தென்பாலை காசிநாதன், கலைதாசன் மற்றும் ஒன்றிய,கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X