பொது செய்தி

தமிழ்நாடு

சிகிச்சை முடிந்து திரும்பிய டிராபிக் போலீசுக்கு கலெக்டர், எஸ்.பி., வாழ்த்து 

Added : மே 23, 2020
Share
Advertisement

விக்கிரவாண்டி; விக்கிரவாண்டியில் கொரோனா தொற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய போக்குவரத்து போலீஸ்காரருக்கு கலெக்டர்,எஸ்.பி., நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.விழுப்புரம் அடுத்த நன்னாடு, வ.பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன், 34; விக்கிரவாண்டி போக்குவரத்து காவல் பிரிவு போலீஸ்காரர்.இவர், விக்கிரவாண்டி டோல்பிளாசாவில் சென்னைகோயம்பேட்டிலிருந்து வீடு திரும்பும் தொழிலாளர்களைக் கண்டறிய வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது இவருக்கு கொரோனா தொற்று அறிகுறி ஏற்பட்டது.இதையடுத்து கடந்த 12ம் தேதி விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தனிமை பிரிவில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை முடிந்து நேற்றுமுன்தினம் இரவு வீடு திரும்பினார்.அவரை நேற்று கலெக்டர்அண்ணாதுரை, எஸ்.பி., ஜெயக்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து, பழங்களைக் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.திட்ட இயக்குனர் மகேந்திரன், ஏ.டி.எஸ்.பி., சரவணக்குமார் , தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, டிராபிக்இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X