அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆர்.எஸ்.பாரதியை'கைது செய்தது ஆந்திர போலீசா?'ஸ்டாலின் கேள்வி

Updated : மே 25, 2020 | Added : மே 23, 2020 | கருத்துகள் (77)
Share
Advertisement
ஆர்.எஸ்.பாரதியை'கைது செய்தது ஆந்திர போலீசா?'ஸ்டாலின் கேள்வி

சென்னை :'ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும், அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று, முதல்வர் சொல்கிறார். அப்படியானால், பாரதியை கைது செய்தது, ஆந்திர போலீசா' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை: ஆர்.எஸ்.பாரதியை, 'அவர் என்ன விஞ்ஞானியா' என, முதல்வர் கேட்டுள்ளார். ஜெயலலிதா மீதே, டான்சி நில பேர ஊழல் வழக்கு போட்டு, ஆட்டம் காண வைத்தவர், ஆர்.எஸ்.பாரதி. அவரது கைதுக்கும் அரசுக்கும், எந்த சம்பந்தமும் இல்லை என, முதல்வர் சொல்லி இருக்கிறார். அப்படியானால், அவரை கைது செய்தது, ஆந்திர போலீசா?

கைது செய்திருப்பது, தமிழக காவல் துறை என்றால், அரசுக்கு சம்பந்தம் இல்லாமல், எப்படி இருக்க முடியும்; காவல் துறை யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது? தமிழகமே ஸ்தம்பித்திருக்கிறது என்ற வாய்மையை, வாய் தவறி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

அச்சத்திலும், பீதியிலும், தமிழகம் ஸ்தம்பித்து தான் இருக்கிறது. திசை திருப்பும் தீய நோக்கத்துடன், கபட நாடகங்கள் எத்தனை நடத்தினாலும்; மக்கள் மன்றத்தில், அடுக்கடுக்கான ஊழல் அத்தியாயங்களை அம்பலப்படுத்த, தி.மு.க., எப்போதும் தயங்காது; தயாராகவே இருக்கும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (77)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Chennai,இந்தியா
26-மே-202011:35:52 IST Report Abuse
Raj பாரதி அப்படி என்ன சொன்னார்?
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
25-மே-202010:40:33 IST Report Abuse
Matt P காவல்துறை என்பது ஆளும்கட்சி அரசியல் கட்சி என்றாலும் அரசியல் தலையீடு இல்லாமல் செய்லபடுவது தான் முறை. நீதித்துறையும் அப்படியே. அதனால் தான் நம்பக தன்மை காரணமாக ஜெயலலிதா குற்றவாளியாக அறிவிக்கப்பட்டபோது வழக்கு பிற மாநில நீதிமன்றத்தால் நடத்தப்பட்டது. அழகிரி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டபோதும் ஆந்திராவில் வழக்கு நடந்தது. கருணாநிதி காலத்தில் காவல் துறை அவர் விருப்பபடி நடந்திருக்கலாம். முதல்வர் நினைத்தால் ஆர் எஸ் பாரதியின் கைதை மனது வைத்து தடுத்திருக்கலாம் என நினைக்கிறார். ஸ்டாலின். ...ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் கட்சிகாறார்கள் தவறுகள் செய்தால் தப்பிக்க வைத்துவிடுவார். அவர் மனநிலை அப்படி ....கிழிஞ்சுது போங்க.
Rate this:
Cancel
Mithun - Bengaluru,இந்தியா
24-மே-202023:21:18 IST Report Abuse
Mithun வருங்கால திமுக தலைவர் தயாவை பேசசொல்லவும். திமுகவின் கதாநாயகன் தயாதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X