ஆர்.எஸ்.பாரதியைகைது செய்தது ஆந்திர போலீசா?ஸ்டாலின் கேள்வி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆர்.எஸ்.பாரதியை'கைது செய்தது ஆந்திர போலீசா?'ஸ்டாலின் கேள்வி

Updated : மே 25, 2020 | Added : மே 23, 2020 | கருத்துகள் (77)
Share
ஆர்.எஸ்.பாரதியை'கைது செய்தது ஆந்திர போலீசா?'ஸ்டாலின் கேள்வி

சென்னை :'ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும், அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று, முதல்வர் சொல்கிறார். அப்படியானால், பாரதியை கைது செய்தது, ஆந்திர போலீசா' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை: ஆர்.எஸ்.பாரதியை, 'அவர் என்ன விஞ்ஞானியா' என, முதல்வர் கேட்டுள்ளார். ஜெயலலிதா மீதே, டான்சி நில பேர ஊழல் வழக்கு போட்டு, ஆட்டம் காண வைத்தவர், ஆர்.எஸ்.பாரதி. அவரது கைதுக்கும் அரசுக்கும், எந்த சம்பந்தமும் இல்லை என, முதல்வர் சொல்லி இருக்கிறார். அப்படியானால், அவரை கைது செய்தது, ஆந்திர போலீசா?

கைது செய்திருப்பது, தமிழக காவல் துறை என்றால், அரசுக்கு சம்பந்தம் இல்லாமல், எப்படி இருக்க முடியும்; காவல் துறை யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது? தமிழகமே ஸ்தம்பித்திருக்கிறது என்ற வாய்மையை, வாய் தவறி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

அச்சத்திலும், பீதியிலும், தமிழகம் ஸ்தம்பித்து தான் இருக்கிறது. திசை திருப்பும் தீய நோக்கத்துடன், கபட நாடகங்கள் எத்தனை நடத்தினாலும்; மக்கள் மன்றத்தில், அடுக்கடுக்கான ஊழல் அத்தியாயங்களை அம்பலப்படுத்த, தி.மு.க., எப்போதும் தயங்காது; தயாராகவே இருக்கும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X