பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் நடமாட்டத்துக்கு கட்டுப்பாடு

Added : மே 23, 2020
Share
Advertisement

சென்னை : பொது மக்கள் நடமாட்டம், கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்தும் உத்தரவை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் செயலர், இமானுவேல் தாக்கல் செய்த மனு: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மத்திய அரசும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும், பல்வேறு ஆலோசனைகளை, வழிமுறைகளை பிறப்பித்துள்ளன.தடுப்பு நடவடிக்கைஊரடங்கு அறிவிக்கப்பட்டு, 45 நாட்கள் ஆகியும், வைரஸ் கிருமியை ஒழிக்க, இன்னும் எத்தனை நாட்கள் ஆகும் என்பது, உறுதியாக தெரியவில்லை. ஊரடங்கு மட்டுமே தீர்வல்ல என, உலக சுகாதார அமைப்பும் கூறியுள்ளது.அடிப்படை உரிமைகளை நசுக்கி, ஊரடங்கை நீட்டிக் கொண்டிருப்பதில் நியாயமில்லை.

சமூக இடைவெளியை பின்பற்றி, அரசியல், மத நிகழ்வுகளை நடத்த அனுமதிக்கலாம். இரவு, 7:00 மணி முதல், காலை, 7:00 மணி வரை, ஊரடங்கை அமல்படுத்துவதற்கும், வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கும் சம்பந்தமில்லை. தமிழகத்தில், 25 மாவட்டங்களில் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது; ஆனால், ஒரு மாவட்டத்தில் இருந்து, மற்றொரு மாவட்டத்துக்கு போக்குவரத்து கிடையாது. இதனால், ஏழை எளியவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. ஊரடங்கு அமல்படுத்தும் போதும், நீட்டிக்கும் போதும், பிரதமரின் பேச்சு தவிர, வேறு காரணங்கள் எதுவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் சுகாதார துறை இணையதளத்தில் தெரிவிக்கப்படவில்லை. மத்திய அரசின் உத்தரவை, தமிழக அரசு அப்படியே பின்பற்றுகிறது.


விசாரணை


ஊரடங்கு நீட்டிப்பால், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஊரடங்கை நீட்டித்து, மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்த உத்தரவை, ரத்து செய்ய வேண்டும். பொதுமக்கள் நடமாட்டம், அரசியல், சமூக, மத ரீதியிலான நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பை, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு, விரைவில் விசாரணைக்கு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X