சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முண்டியம்பாக்கத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட தெருக்களுக்கு சீல்

Added : மே 23, 2020
Share
Advertisement

விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கம் தனியார் சர்க்கரை ஆலை பணியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தெருக்கள் மற்றும் பணிபுரிந்த இடத்திற்கு தடுப்புகள் அமைக்கப்பட்டது.விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கம் தனியார் சர்க்கரை ஆலையில் கரும்பு அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சிப் பிரிவில் பணிபுரியும் 25 வயது இளம் ஆராய்ச்சியாளர். இவர், கடந்த 20 ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சேலத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றார். அங்கு அவருக்கு நோய்தொற்று உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து நேற்று பிற்பகல் மாவட்ட நிர்வாகத்திற்கு நோய்த்தொற்று உறுதி குறித்த தகவல் வந்ததையடுத்து கலெக்டர் அண்ணாதுரை உத்தரவின் பேரில் விக்கிரவாண்டி வட்டார மருத்துவ அலுவலர் வினோத், பி.டி.ஓ.,க்கள் எழிலரசு, நந்தகோபாலகிருஷ்ணன், சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணன், ஆய்வாளர் விஜயகுமார், வி.ஏ .ஓ., பால்ராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர், ஆராய்ச்சியாளர் பணி புரிந்த சர்க்கரை ஆலை பகுதி, அவர் தங்கியிருந்த வடிவேல் முதலியார் தெரு, உடன் பணிபுரிந்த மூன்று நபர்கள் வசிக்கும் வடகுச்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வெளியாட்கள் யாரும் நுழையாதவாறு தடைசெய்யப்பட்டு தடுப்பு வேலி அமைக்கப்பட்டது.இப்பகுதிகளில் கிருமி நாசினி செலுத்தப்பட்டு உடன் பணிபுரிந்த 3 நபர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட அறிவிப்பு நோட்டீசை அதிகாரிகள் ஒட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X