'மாயா' என்ற புலியைப் பற்றிய இவரது ஆவணப்படம், உலக அளவில் விருதுகளை பெற்று தந்துள்ளது. தன் போட்டோகிராபி பயணம் பற்றி, ஐஸ்வர்யா: தமிழகம் தான் பூர்வீகம். தாத்தா காலத்தில் இருந்தே, மும்பையில் வசிக்கிறோம். ரெண்டு வருஷத்துக்கு முன், 'மாஸ் மீடியா கோர்ஸ்' முடித்தேன். இந்தத் துறையையே என் வேலையாக ஏத்துக்கிட்டேன்.
போட்டோகிராபியில் ஆர்வம் உடைய அப்பா, எனக்கு விவரம் தெரிஞ்ச காலத்துல இருந்து, காட்டுக்கு கூட்டிட்டு போவார். 12 வயதிலிருந்து, முறைப்படி போட்டோ எடுக்கிறேன். பொண்ணுங்க வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது என்ற பேச்சே, எங்க வீட்டுல கிடையாது. 'உனக்குப் பிடித்ததை செய்; சரியாகச் செய்'ன்னு தான் சொல்வாங்க. அந்த ஊக்கத்துல, இப்போது, ஆவணப்பட இயக்குனராகவும் மாறிஇருக்கேன்.நம் நாட்டின் புகழ் பெற்ற புலியாகக் கருதப்படும், 'மாயா' குறித்த ஆவணப்படத்துக்காக, ஆறு ஆண்டுகள் ஆய்வு செய்திருக்கிறேன். குட்டியாக இருக்கும்போதே தாயை இழந்து, தனியாகவே வளர்ந்த மாயா, தன்னைத் காத்துக்க ரொம்பவே போராடியிருக்குது.
அது, முதல் முறை பெற்றெடுத்த, ரெண்டு குட்டிகளுமே இறந்திடுச்சு. ரெண்டாவது முறை பெற்ற, மூணு குட்டிகளில், ஆண் புலிகள் துரத்தி விட்டதால், ரெண்டு குட்டிகள் என்ன ஆச்சுன்னு தெரியலை. மூணாவது முறை, ரெண்டு குட்டிகள் பெற்று, அதில் இப்போ, ஒண்ணு தான் உயிரோடு இருக்குது. பிரசவம் முடிந்த ஒவ்வொரு முறையும், செந்நாய்கள், ஆண் புலிகள், கரடிகளிடமிருந்து, தன் குட்டிகளைப் பாதுகாக்க, மாயா ரொம்பவே போராடுது.போராட்டக் குணத்தால் அது, இப்போது ரொம்பவே ஆக்ரோஷமாக மாறியிருக்குது.
மஹாராஷ்டிராவின், சந்தர்பூர் மாவட்டத்தில் உள்ள, தடோபா காட்டில் தான், மாயா வசிக்கிறது. ஒருமுறை, மாயாவைப் பார்க்கப் பல மணி நேரம் காத்திருந்தோம். திடீர்னு வெளியே வந்த மாயா, ரெண்டாவது பிரசவத்தில் பிறந்த தன், மூன்று குட்டிகளுடன் சேர்ந்து, ஒரு மானை வேட்டையாடியதை, பக்கத்தில் இருந்து பார்த்தேன். மற்றொரு முறை, அந்த குட்டிகளுக்கு, காட்டெருமையை வேட்டையாடக் கத்துக் கொடுத்து, எல்லாம் சேர்ந்து சாப்பிட்டன. அதுபோல, ஆண் புலியுடன் ஆக்ரோஷமா சண்டை போட்ட தருணங்களைப் பார்த்தது, 'செம த்ரில்லிங்!' மாயா புலியின் வாழ்க்கை பற்றி, 'குயின் ஆப் டார்'ன்னு ஆவணப்படம் எடுத்தேன்.
'வைல்டு லைப் கன்சர்வேஷன் பிலிம் பெஸ்டிவலில்' தேர்வாகி, சிறந்த அறிமுக பிலிம் மேக்கருக்கான விருது கிடைத்தது. அடுத்து, சிங்கப்பூர் சவுத் ஏசியன் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல்லயும் இந்தப் படம் தேர்வாகியிருக்கிறது. இங்கிலாந்து மன்னர் குடும்பத்தின், 'தி டயானா' விருதும், சமீபத்தில் கிடைத்திருக்கிறது!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE